Friday, December 14, 2007

ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கக் கூடாது?

ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடுகிறேன்... நான் BJP ஆதரவாளனோ, hindutva'வின் மேல் பிடிப்புள்ளவனோ கிடையாது. சொல்லப் போனால், சில நாள் முன்பு எனக்கு வந்த ஒரு forwarded mail'க்கு reply அடிக்கும் போது கூட, நான் மோடியின் கோத்ரா riot'ஐ வன்மையா எதிர்க்கிறேன் என்றும் கூட சொல்லியிருந்தேன். So, இதை மனதில் வைத்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.

சரி... இப்பொழுது மோடி செய்வது என்ன என்று பார்க்கலாம். Hindutva'வை வைத்து, அதாவது மதத்தை வைத்து, அரசியல் பண்ணுகிறார் என்பது தானே media உட்பட எல்லா அரசியல்வாதிகளும் மோடி மேல் சொல்லும் குற்றச்சாட்டு?

அப்படிப் பார்த்தால், மற்ற அரசியல்வாதிகள் ஜாதிகளை வைத்து அரசியல் செய்வது போல் தானே இதுவும்? வன்னியர்களுக்காக மட்டுமே ஒரு கல்லூரியை நடத்துவதை பெருமையாகப் பேசுகிறார் ராமதாஸ். பகத்சிங்கின் ஜாதிக்காரர்கள் யாரும் தமிழ்நாட்டில் வாழாததால், பசும்பொன் தேவர்க்கு மட்டும் விழா எடுக்கிறார்கள் கலைஞரும் அம்மாவும். இது தமிழ்நாட்டில் மட்டும் நின்று விடவில்லை. தலித்களுக்கு ஆதரவாளராக காட்டிக்கொள்ள மாயாவதி உ.பி-யில் கஷ்டப்படுகிறார்(?) பீகாரில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் ஆதரவாலேயே மறுபடி மறுபடி வெற்றி கண்டார் லல்லு. இப்படி புற்றீசல் போல், இந்தியா முழுவதும் ஜாதியை வைத்துத் தான் அரசியல் பண்ணுகிறார்கள்.

எல்லோரும் ஜாதியை வைத்து மக்களைப் பிரிக்கிறார்கள் என்றால் மோடி மதத்தை வைத்துப் பிரிக்கிறார். அவ்வளவு தானே வித்தியாசம்?? huh ...??

மறுபடியும் சொல்கிறேன்... நான் மோடி செய்ததை நியாயப் படுத்தவில்லை. ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் அவர் செய்வதைத் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்கிறார்கள். பின் ஏன் மோடிக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு? என்ன மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் செய்வதை மோடி மாட்டிக்கொள்ளும் வகையில் செய்து விட்டார்.

இதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், மோடி உண்மையிலேயே சிறந்த நிர்வாகி... தனது அரசாங்கத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு இடம் கொடுக்கவில்லை, அதனாலேயே கட்சிக்குள் எதிர்ப்பு நிறைய கிளம்பியும் கூட. "Gramin"ங்கிற திட்டத்தால, எல்லா கிராமங்களுக்கும் power supply கிடைத்திருக்கிறது. தொழில்துறை முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது குஜராத். அடுத்தது ரொம்பவும் முக்கியமான point. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார். Afsal Guru பற்றி தைரியமாக கேள்வி கேட்கிறார். 4 மாநிலங்களில் தேடப்பட்ட குற்றவாளி, Shorabudhin Sheik'ஐப் போட்டுத் தள்ளியது பற்றி தைரியமாகப் பேசுகிறார். கடந்த முறை ஊழல் புரிந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் seat கொடுக்கவில்லை. etc...

அரசியல் என்னும் சாக்கடையில் மோடி உட்பட எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறி இருக்கும் போது, இலவச TV போன்ற கவர்ச்சிகளை நம்பாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மோடி மாதிரி ஒரு CM'ஐ ஏன் ஆதரிக்கக் கூடாது என்பது தான் என் கேள்வி. கோத்ரா வன்முறை உண்மையிலேயே கண்டிக்கத் தகுந்தது தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. அப்படிப் பார்த்தால், Congress'ஐப் பற்றி பேசும்போது இன்னும் சீக்கிய வன்முறைகளைத் தான் பேச வேண்டும். தி.மு.க பற்றிப் பேசினால், சர்க்காரியா ஊழலைத் தான் பேச வேண்டும். லல்லு கூடத்தான் பீகாரை சீரழித்தார். ஆனால் அதற்காக, அதன் பின், railway துறையை profit'ல் போக வைத்ததைப் பெருமையாகப் பேசவில்லையா? அதுபோல் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் மோடிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க கூடாது?

இவ்வளவு நாளும், "why we should not support Modi."னு fullstop'ஓடு பேசிக்கொண்டிருந்த நான் இப்பொழுது, "why shouldnt we support Modi?"னு question mark'ஓடு நிறுத்துகிறேன். எடுத்த எடுப்புலையே, 'நீ துக்ளக் படிக்கிறவன். இப்படித் தான் பேசுவ'ன்னு சொல்லாம, கொஞ்சம் தர்க்கரீதியா யோசிச்சுட்டு, அப்புறம் reply பண்ணுங்க.... okay'ஆ? இதை ஒரு open debate'ஆக வைக்கிறேன். உங்கள் comments'ஐ மறக்காமல் பதிவு பண்ணிட்டு போங்க... நீங்க reply'ல குறிப்பிடுற கருத்துக்கள் logical'ஆ இருந்தா, என்னோட இந்த question mark'ஐ மறுபடி fullstop'ஆக மாற்றிக்கொள்ள நான் எப்பவும் தயார்.

13 comments:

  1. கோத்ரா சம்பவத்தை ஒட்டி .. நிகழ்ந்த வன்முறையை பரிநித்தா படத்தில் சித்தரிக்கப்பட்டது வெறும் படமல்ல என்று நியாபகம் இருக்குதா ?

    சமீபத்தில் , தெல்கா தொலைகாட்சி இரகசியமாய் பதிவு செய்த விடியோ ஒன்றை வெளியிட்டதும் , உடனே குஜராத் அரசாங்கமே வரிந்து கட்டுக்கொண்டு அதை தடை பண்ணிய கூத்து மறந்து விட்டதா ? குறைந்த பட்சம் அதை சரியான விதத்தில் கூட அதை மறுத்து ஒரு அறிக்கை விடவில்லை .. அப்படியானால் தாங்கள் செய்தது நியாயம் என நினைப்பதால் தானே ..

    சரி மச்சான்.. இது வரை எல்லார் செய்த தவறுகளையும் மன்னித்து , மன்னிப்பது கடவுள் குனமென .. நாட்டில் கொலைக்குற்றம் செய்தவனிலிருந்து , சாலையில் சிகப்பு விளக்குக்கு வாகனத்தை நிறுத்தாமல் செல்பவன் வரை எல்லாவரையும் விடுதலை செய்து விடலாம் .. including அதிக கட்டண ஆட்டோக்களையும் ..

    i have more to tell ..but i dont think a blog comment reply would do..

    ReplyDelete
  2. Rowdy... நான் முதல்லயே சொல்லிட்டேன்... கோத்ரா கொலைகளை நான் எந்த வகையிலும் நியாயப் படுத்தவில்லை. நான் கேக்குறதெல்லாம்... குஜராத்ல மோடி செய்யிரதைத் தான மத்த states'ல மத்த CMs செஞ்சுட்டு இருக்காங்க? என்ன... அவங்க செய்யுறது வெளில வரலை.. அவ்வளவு தான்...

    நான் யாரையும் மன்னிக்க சொல்லவில்லை. இருக்கிற திருடர்களில், கொஞ்சம் பரவாயில்லாத, கொஞ்சம் better'ஆன ஒரு திருடனை ஏன் ஆதரிக்கக் கூடாது?

    ReplyDelete
  3. நீ ஆதரிக்கல்லை னு புரியுது , இந்த பெட்டர் திருடன்னு நீ மோடியை நினைப்பது ஆச்சர்யமாத்தான் இருக்கு..

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு இன மக்களை கூண்டோடு அழிக்க முற்படுவது மன்னிக்கப்படலாம் என்கின்ற எண்ணம் ஒரு நல்ல அறிகுறி அல்ல..

    மு.க வோ, ஜெயோ .... இவர்களால் உயிரிழப்பே ஏற்படவில்லை என நான் சொல்ல வில்லை , இவர்கள் உத்தமர்களும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், .. ஆனால் திட்டமிட்டு வேற்றுமையை பரப்பி , மனித உயிர்களை அழித்தவர்கள் பெட்டர் திருடர்களை அங்கீகரிக்கப்படுவது .. கட்டாயம் காமெடி அல்ல .. மிகவும் தவறான புரிதல் ..

    நான் மன்னிக்க சொல்லிய குற்றங்களில் , அதிக ஆட்டோ கட்டணம் வசூளிப்பவருக்கு மரண தண்டனையும் , தன் ஜாதியில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்காக அடுத்த ஜாதியில் பத்து கொலை செய்து விட்டு , கோயில் உண்டியலில் பத்து கோடி போடும் ஒருவனை கடவுள் பெட்டர் திருடன் என்று சொல்லுவரோ ? .. மோடி செய்த விஷயங்களில் இருந்து பயன் பெற்றவர் யார் யார் ?! ஜாதி மத வித்தியாசம் இல்லாத அத்தனை பேருமா ? இல்லை இந்து என்ற அடையாளம் கொண்ட மக்கள் மட்டுமா ? இங்கே மக்களுக்கு நல்லது செய்தார் என்பதில் .. அவர் கணக்கில் மக்கள் என்பது யார் ?

    ReplyDelete
  4. Just happened to read your article. I completely disagree with you. There is a lot of difference between religion and community. Madhathai vaithu Arasiyal pannuvadhaal Madha Poosalgal uruvaagi, adhu kalavaramaaga mudiyum. Jadhiyai vathu pannuvadhaal idhu pol nadakka vaippu illai. Ennai porutha varai Hindu, Muslim, Christain agiyavai migavum sensitivaanavai. Avarrai koori vottu ketpadhu migavum thavaru.

    ReplyDelete
  5. @Sathiya... I partially agree with ur point... மதத்தை வைத்து அரசியல் பண்ணும் போது, வர வாய்ப்புள்ள கலவரங்களை விட, சாதியால் வர வாய்ப்புள்ளவை, propotionally "கொஞ்சம்" கம்மி என்ற அளவில் ஒப்புக்கொள்கிறேன்.

    மற்றபடி, தான் இன்ன ஜாதி என்ற உணர்வு மனதில் ஊறியுள்ள அளவிற்கு, யாருக்கும் தான் இன்ன மதம் என்ற உணர்வு இருப்பதாக எனக்குத் தோணவில்லை. எனவே, உணர்ச்சிகளைத் தூண்டுவதில் மதமோ, ஜாதியோ ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. என்ன... ஜாதிய உணர்வுகளைத் தூண்டுவதால், அந்த பிரச்சினை, மற்ற இடங்களிலும் பரவ அந்த ஜாதி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற தேவை உள்ளதால், அதன் தாக்கம், சில ஜாதிக்காரர்களைத் தூண்டி விடுவதால் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் வருந்தத் தக்க விஷயமே... அதிக அளவு பரவியிருக்கும் ஜாதிக்காரகளைத் தூண்டினால் தான், தாங்கள் பிழைப்பு ஓட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் அதே காரியத்தைத் தான் பண்ணுகிறார்கள்.

    So, மறுபடியும் அதே இடத்திற்குத் தானே வந்து நிற்கிறோம்?? அதிக அளவு பரவியிருக்கும் சாதிகளைத் தூண்டி விடுகிறார்கள் மற்ற அரசியல்வாதிகள். மோடி, இந்துக்களை தூண்டி விடுகிறார்?? Again, அதே கேள்வி... "என்ன வித்தியாசம்?"

    ReplyDelete
  6. @Rowdy...
    /*ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு இன மக்களை கூண்டோடு அழிக்க முற்படுவது மன்னிக்கப்படலாம் என்கின்ற எண்ணம் ஒரு நல்ல அறிகுறி அல்ல.. */

    மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்... நான் மன்னிக்க சொல்லவில்லை. வேறு வழியில்லாத பட்சத்தில், ஊறிய மட்டைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தான் ஆக வேண்டும் என்ற நிலையில், யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது தான் என் கேள்வி...!!

    /*ஆனால் திட்டமிட்டு வேற்றுமையை பரப்பி , மனித உயிர்களை அழித்தவர்கள்* /

    எந்த அரசியல்வாதி செய்யவில்லை இதை?? அதனால் தான் முதலிலேயே சொல்லியிருந்தேன்... மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத மாதிரி பண்ணுவதை, மோடி மாட்டிக்கொள்ளும் வகையில் செய்துவிட்டார்.

    /*மோடி செய்த விஷயங்களில் இருந்து பயன் பெற்றவர் யார் யார் ?! */

    நம்ம ஊர்ல கூடத்தான், ஒவ்வொரு ஜாதிக்காரர்கள் பெயரைச் சொல்லி, அவர்களுக்காக மட்டுமே நான் உழைக்கிறேன்னு சொல்லிக்கிற அரசியல்வாதிகள் எத்தனை பேரு இருக்காங்க?

    /* அவர் கணக்கில் மக்கள் என்பது யார் ? */

    மற்ற அரசியல்வாதிகளுக்கு மக்கள் என்பது எப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியோ, அதே போல் மோடிக்கு மக்கள் என்பதைப் பொறுத்த வரை குறிப்பிட்ட மதத்தினர்.

    இப்பொழுதும் நான் மோடி செய்வதை சரின்னு சொல்லலை... ஆனா மற்ற அரசியல்வாதிகளிடம் காணப்படாத ஒரு வெறுப்பு / முத்திரை மோடி மேல் மட்டும் ஏன்?

    இன்னொன்னும் கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையை அலசலாம்... களையப்பட வேண்டியவை மதவாதம் மட்டும் அல்ல.. தீவிரவாதமும் தான்... எனக்குத் தெரிந்து, வேறு எந்த அரசியல் கட்சிகளும் தீவிரவாதிகளிடம் கடுமை காட்டவில்லை, அதுவும் தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதமாக இருந்தால்! அப்படிப் பார்த்தால், தீவிரவாதத்தை ஓட்டிற்காக வளர விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கும், மற்ற அரசியல்வாதிகள் தானே காரணம்? இஸ்லாமிய தீவிரவாதம் வளர உதவும் அரசியல்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்.... hindutva'ஐ மையமாக வைத்து அரசியல் செய்யும் ஒருவரை மட்டும் எதிர்க்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

    ReplyDelete
  7. இன்னொன்றையும் சொல்ல விட்டுவிட்டேன்... ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என்கிறோம்... மதங்கள் செழித்தோங்க வேண்டும் என்கிறோம்... ஆனால், ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களை விட, மதத்தை வைத்து செய்பவன் மோசமானவன் என்கிறோம்... இரண்டுமே, மோசம் தான்... இருக்கிறதில் எது நல்லது என்று தானே பார்க்க முடியும்?? ஆக, இந்த கோணத்தில் பார்த்தாலும் நரேந்திர மோடியை ஏன் ஆதரிக்கக் கூடாது என்ற கேள்வி தானே வருகிறது?

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வதை என்னால் சிறிது கூட ஏற்று கொள்ள முடியவில்லை. "டெஹல்கா" மட்டேற படிசீங்கள? ஒரு முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணோட வயித்த கிழிச்சு குழந்தைய வெளிய எடுத்து கொன்னு இருக்காங்கனு ரொம்ப பெருமைய ஒருத்தன் சொல்றான். நரேந்திர மோடி இந்த கலவரத்துக்கு மூணு நாள் டைம் கொடுத்தாராம். மூணு நாள் குள்ள என்ன வேணும்னாலும் பண்ணிகொங்கன்னு சொல்லிட்டாராம். இவரெல்லாம் ஒரு மனுஷனா? முதல ஒரு மனுஷனா இருக்கட்டும். அப்புறம் அரசியல் வாதியாகலாம். இந்த தவறை யார் செய்திருந்தாலும் நான் இதை தான் சொல்லி இருப்பேன். எனக்கு தெரிந்து என்னோட ஜாதி'யை நான் community certificate பார்த்து தான் தெரிந்து கொண்டேன். மற்றபடி நான் ஒரு ஹிந்து என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். Dr. ராமதாஸ் வன்னியர்களுக்கு உதவி செகிறார் என்றால் செய்து கொள்ளட்டும். மற்றவர்களுக்கு தீங்கு செய்யாத வரை, மற்றவர்கள் உயிரை எடுக்காத வரை அதில் ஒன்றும் தவறில்லை. மோடி தைரியமாக பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்று சொல்கிறீர்கள். அவர் இது வரை ஒரு ஹிந்து தீவிரவாதியை பற்றி கேள்வி கேட்டுருக்கிறாரா? நானும் ஒரு ஹிந்து தான். ஆனால் எனக்கு இந்த RSS, BJP போன்ற பெயர்களை கேட்டாலே எரிச்சல் வருகிறது. என்னுடன் பணிபுரிபவர் ஒருத்தர் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ரொம்ப நல்ல மனிதர். நிறைய பேருக்கு அவர் பாகிஸ்தான் என்று தெரியாது. நம்ம வட இந்திய ஆள் என்று நினைத்துக்கொள்வார்கள். அவர் தான் பாகிஸ்தானியர் என்று சொன்னதும், மற்றவர்கள் ஒரு reaction கொடுப்பார்கள் பாருங்க....எனக்கே அவரை பார்த்தா பாவமா இருக்கும். ஆனால் அவர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்.

    நரேந்திர மோடிக்கு அமெரிக்காவே விசா மறுத்தது எதற்காக? யாரும் இங்கே மதம் ஓங்கி வளர வேண்டும் என்று சொல்ல வில்லை. முதலில் மனிதர்களை மனிதர்களாக பாருங்கள். உங்களுக்கு உங்களை பற்றி எத்தனை தலைமுறை வரைக்கும் தெரியும்? மிஞ்சி மிஞ்சி போனால் மூறு அல்லது நான்கு. அதற்கு முன் நீங்க வேறு மதமாக இருந்தால்? ஒரு காலத்தில் இந்திய முழுவதையும் முகலாயர்கள் தான் ஆண்டு வந்தார்கள். நம்மூரில் இந்த மதம் என்றால், வெளி நாடுகளில் நிறம். இதெல்லாம் எந்த நாய் கண்டு பிடிச்சுதுன்னு தெரியல. Scientificala சொல்ல போனால், இந்த உலகமே ஆப்ரிக்கா நாட்டில் இருந்து தான் உருவானதாம்.

    ReplyDelete
  9. இன்னொன்றை சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் சொல்வதை பார்த்தால் மோடி ஜாதியே பார்க்கமட்டாரா? அப்படி என்றால் அவரது ஆட்சியில் ஹரிஜன மக்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  10. @Sathiya... மீண்டும் partially accepted ur views. முதலில் மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கன்னு, மதத்தை அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னீங்க பாத்தீங்களா... முழுமையா ஆமோதிக்கிறேன். ஆனா, இங்க நான் விவாதத்திற்கு வைத்திருக்கிற விஷயத்திற்கும், இதற்கும் சம்பந்தமே கிடையாதே... நீங்க சொன்ன point, ஒரு சாதாரண குடிமகனுக்கு வேணா பொருத்தமா இருக்கலாம்... நீங்களும் நானும் follow பண்ணலாம்... ஆனா, எத்தனை அரசியல்வாதி follow பண்ணுவாங்கன்னு நினைக்குறீங்க? எத்தனைன்னு கேக்குறது கூட தப்பு... யாருன்னு கேக்கணும்!! அது தான் என்னோட கருப்பொருளே... எந்த அரசியல்வாதியும் மனுஷனை மனுஷனா பாக்குறது கிடையாது... மதமோ, ஜாதியோ போன்ற அடையாளங்களை வைத்துத் தானே பார்க்கிறார்கள்? பின் ஏன் மோடி மேல் மட்டும் இத்தனை கோபம் என்பது தான் எனது கேள்வியே..!!

    இன்னொரு விஷயம் சொன்னீங்க... Tehelka tape... மறுபடியும் சொல்கிறேன்... அந்த riot'ல் மோடியின் நடவடிக்கை நிச்சயம் தண்டனைக்கு உட்பட வேண்டியது தான்... ஆனால், இதற்கான விளக்கத்தையும் எனது பதிவிலேயே சொல்லியிருந்தேன்... இந்த நாட்டில் நடக்கும் எந்த கலவரத்திற்குப் பின்னால் தான் அரசியல்வாதிகள் இல்லை? என்ன... மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் செய்து விடுகிறார்கள்... இது தான் என் ஆதார கேள்வியே... எல்லாருமே தான் waste... எல்லாரும் தான் மக்களை exploit பண்ணுபவர்கள்... எல்லாரும் தான் நாட்டில் நடக்கும் கலவரங்களைப் பின்னால் இருந்து தூண்டி விடுகிறார்கள்... எல்லா அரசியல்வாதிகளும், தாங்கள் சார்ந்திருக்கும் ஒரு/சில இனங்களை வளர்த்து விட எந்த extend'க்கும் போகிறார்கள்... இவை அனைத்தும் சொல்லித் தெரியவேண்டும் என்பதில்லை... அப்படி இருக்கும் போது, மோடியை மட்டும் எதிர்ப்பது என்ன காரணத்தால்...?

    /*மற்றவர்களுக்கு தீங்கு செய்யாத வரை, மற்றவர்கள் உயிரை எடுக்காத வரை அதில் ஒன்றும் தவறில்லை*/
    (எனக்கு அந்த நேரத்தில் அவ்வளவாக விவரம் தெரியாது..) அரசியலுக்காக மரங்களை வெட்டினார்களே... தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் ஒன்று நடந்ததே... after all ஒரு உள்ளாட்சித் தேர்தலுக்காக அவ்வளவு அடித்துக் கொண்டார்களே... recent eg... குடும்ப விவகாரதிர்க்காக தினகரனில் பணிபுரிந்த ஊழியர்களை உயிரோடு கொழுத்தினார்களே... சொல்லிக்கொண்டே போகலாமே... (நான் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் கொடுத்திருக்கிறேன்) என்ன... ஒரு சின்ன வித்தியாசம்... மற்ற இடங்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை நிகழ்த்துவார்கள்... மோடி மூன்றே நாளில் நிகழ்த்தி விட்டார். பாதிப்பு என்னமோ ஒன்று தானே?

    /*மோடி ஜாதியே பார்க்கமட்டாரா?*/
    Media'வில் படித்ததை வைத்துத் தான் சொல்கிறேன்... எனக்குத் தெரிந்து, அப்படி ஜாதி எல்லாம் பார்க்காமல், மக்களுக்கு ஏதாவது செய்வாங்கன்ற மாதிரி இருக்கிறவங்களைத் தான் இந்த தடவை வேட்பாளரா நியமிச்சிருக்கார். அதுனாலயே கட்சில நிறைய உள்கட்சிப் பிரச்சினைகளும் கூட!!

    /*அவர் இது வரை ஒரு ஹிந்து தீவிரவாதியை பற்றி கேள்வி கேட்டுருக்கிறாரா?*/
    உண்மையில் என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி தான்... valid point Sathiya.

    /*அதற்கு முன் நீங்க வேறு மதமாக இருந்தால்? */
    ஆஹா... என்னோட பதில் எதுவும், ஏதோ, "நான் ஹிந்துன்னு சொல்லிக்கிறதுக்கு பெருமைப்படுறேன்னு" சொல்ற மாதிரி இருந்துச்சா என்ன? கடவுள் இருக்காருன்னும் சொல்லத் தெரியாம, இல்லைன்னும் அழுத்திச் சொல்ல முடியாத, கடவுள் இருப்பையும், மற்ற வழிபாட்டு முறைகளையும் logical'ஆகப் பார்க்கும் ஒரு சாதாரண மனுஷன் தாங்க நானும். :-)

    ReplyDelete
  11. நான் உங்கள பத்தி சொல்லலைங்க. ஒரு flow'la அந்த மேட்டர் வந்துடுச்சு. ஆனா அதை அரசியல் வாதீங்களுக்கு சொன்னது. நானும் உங்க கருத்தை 50% ஏதுக்கறேன். அந்த tehelka மேட்டர்லேயே ஒன்னுரு விஷயம் இருக்குங்க. நிறைய முஸ்லிம்களை கொள்ள முடிய வில்லையே என்று மோடி ரொம்பவும் வருத்தப்பட்டாராம். அவர் மட்டும் ஆட்சியில் இல்லை என்றால் அவரே போயி வெடி குண்டு வீசி இருப்பாராம். இப்படீன்னு ஒருத்தர் வாக்கு மூலம் கொடுத்து இருக்கார். இந்த மாதிரி வெறி உள்ள ஒரு ஆள் தேவையான்னு தான் நான் நினைக்கிறேன்? மற்றபடி எல்லா அரசியல் வாதீங்களும் ஒரே மாதிரி தான். நீங்க சொல்ற பஸ் எரிப்பு எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் தான். அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை குறி வைத்து செய்தது கிடையாது. அது பெரிய கலவரமாக வாய்ப்பு கிடையாது. அதற்காக அது சரி என்று சொல்ல வில்லை. சரி நமக்குள்ள எதுக்கு இந்த வாதம். எப்படியும் உங்க மோடி தான் ஜெயிக்க போறார்;) மோடிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சரி விடுங்க... எனக்கு என்னமோ, நாம ரெண்டு பேரும் ஒரே point'யே வேறு வேறு வார்த்தைகளால மாறி மாறி சொல்லிட்டு இருக்கிற மாதிரி இருக்கு!! :-)

    ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்... "உங்க மோடி"னு எல்லாம் சொல்லாதீங்க... நானும் வேறு வழியில்லாமத் தான் ஆதரிக்கலாம்னு சொல்றேன். (or கேக்குறேன்) :-)

    ReplyDelete
  13. http://www.ibnlive.com/blogs/author/1388/3236/gujaratblogs.html

    Atlast, media comes to the support for Modi and its gud that they realized the pseudo secular act of other parties!! Ppl in India also should realize that only the development and action against terror should be counted finally instead of just speaches abt secularism!

    ReplyDelete