Saturday, December 08, 2007

பொல்லாதவன் -- விமர்சனம்

சில படங்களை அதிக expectations'னோடு பார்க்கப் போவோம். சுத்தமாக ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை friends யாராவது நல்லா இருக்குன்னு சொன்னதால பார்க்கப் போவோம்.எதிர்பாராத ஆர்ச்சரியங்கள் காத்திருக்கும். முதலாவதற்கு eg ராமேஸ்வரம். இரண்டாவதற்கு இந்தப் படம்.Correct'ஆக சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் போகலாம் என்று கடைசி நிமிடத்தில் தான் முடிவெடுத்தேன். So, title card வேறு miss ஆகி விட்டது. படம் முடிந்து வெளிவரும் பொழுது, கொஞ்சம் சீக்கிரம் படத்திற்கு வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது என்னவோ உண்மை. :-)

இந்தப் படத்தை எல்லாரும் Bicycle thieves உடன் compare பண்ணினார்கள். ஆனால் City of God உடன் compare பண்ண வேண்டிய படம் இது. (புதுப்பேட்டை படத்திற்கும் City of God'ற்கும் சம்பந்தமே கிடையாது. புதுப்பேட்டை முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப் பட்ட படம். Gangsters பற்றிய படம் என்றாலே City of God என்றால், City of God'ஐயும் God Father உடன் தான் compare பண்ண வேண்டும்)

பொல்லாதவனின் கதை City of God மற்றும் Bicycle Theives இரண்டையும் சேர்த்து எடுக்கப் பட்டது. கொஞ்சம் Munich touch கூட இருந்தது. படத்தின் base story Bicycle theives. இடையில் வரும் சம்பவங்களுக்கு inspiration City of God. கடைசியில் அவர்கள் குடும்பத்திற்கு வந்த பயத்தைக் காட்டும் பொழுது inspiration Munich.ஒரு gangster movie'ஐ கொஞ்சம் lively'ஆக எடுத்த விதத்திற்காக director வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். அதுவும் தனுஷ் bike'ஐத் தொலைத்து விட்டு, அதை கண்டெடுக்கப் போகும் இடங்களெல்லாம் ஒரு உண்மையான gansters இடத்திற்குத் தான் வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது. மதுரையில் படிக்கும் போது எனது wallet'ஐத் தொலைத்து விட்டு ஒரு அசட்டு தைரியத்தில் நண்பன் Suku'வையும் கூட்டிக்கொண்டு திடீர் நகருக்குள் நுழைந்தது தான் ஞாபகம் வந்தது. :-)

Director வெற்றி மாறன், BaluMahendra'வின் assistant'ஆம். Camera'ஐப் பார்த்தாலே தெரிந்தது. ரொம்ப different angles, ரொம்ப different'ஆன movements. படத்தின் starting'ல் தனுஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் scene'ல் camera'வும் ஆடிக்கொண்டே இருக்கும். இது போக சில இடங்களில் கண்ணுக்கு உறுத்தாத camera shakes. ie: light'ஆக scene இடம்வலமாக ஆடிக்கொண்டிருக்கும் அல்லது handheld camera'வாக இருக்கும். தனுஷ் தப்பித்து ஓடும் அந்த குறுக்கு சந்தில் எவ்வளவு தூரம் continuous shot என்று கவனித்தாலே cinematography'க்கு டைரக்டர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ரொம்ப natural lighting வேறு. ஒரு Counsiler'இன் கொலையை இவ்வளவு beautiful'ஆகவும் எடுக்க முடியுமா!! camera'வைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் தெரிகிறது. நிறைய scenes, ie: 1 or 2 seconds'ல் வந்து போய் விடக்கூடிய scenes'க்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று. காக்க காக்க இளா அண்ணனைக் கொல்லும் அந்த scene... அப்பா... உண்மையில் இப்படி எல்லாம் camera'வை handle செய்ய முடியுமா என்ன!! பிறகு அந்த கடைசி fight... வெறும் Frames per second'ஐ வைத்துக் கொண்டு graphics effect கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த red tone படத்தின் உண்மையான நிறத்தைச் சொல்கிறது. இப்பொழுது தமிழ் film industry technical aspect'ல் ரொம்ப முன்னேறி விட்டது. எனவே மணிரத்னம், செல்வராகவன் மாதிரி directors படம் எடுத்தால் தான் cinematography'ல் வித்தியாசம் காண்பிக்க முடிகிறது. அந்த வித்தியாசத்தை வெற்றி மாறனும் காட்டி இருக்கிறார்.

Music G.V. Prakash... பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. Already MSV கலக்கி எடுத்த பாடலை அவரை விடவும் நன்றாகபோடுவதென்பது முடியாத காரியம் தான். ஆனால் re-recording நன்றாக இருந்தது. முக்கியமாக அந்த ganster leader பேசும் போதெல்லாம் அடக்கி வாசித்தது...!

Dialogues & Audiography ரொம்பவும் அருமை. நாம் normal'ஆக கேட்காத dialogues. "அந்த கண்ணால என்னைப் பார்க்காதடா"னு சொல்லிக்கொண்டே கண்ணைக் குத்துவது... தனுஷின் சிறு சிறு love dialogues. ரொம்ப யதார்த்தமாக இருந்தது.

Editor யாரு.. Sreegar Prasad'ஆ? படத்தின் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம். முடிந்த வரை காதலைத் தவிர்த்து Gansters'ஐப் பற்றி கதையை நகர்த்திச் சென்ற விதம் அற்புதம். என்ன, யோசிக்காமல் பாடல்களையும் கத்திரி போட்டிருக்கலாம். ரொம்பவும் odd'ஆகத் தெரிகிறது. Moreover, படத்திற்குத் தேவையும் இல்லை.

இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம்... அதன் fast paced script தான். அங்கங்கே பாடல்கள் வந்து இம்சை கொடுத்தாலும், அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு அற்புதமான script. அதுவும் இன்னொரு beauty... love scens தவிர்த்து விட்டுப் பார்த்தால் தனியாக ஒரு script. அதை சேர்த்துப் பார்த்தால் கூட கெடாத script. (inspiration தான் என்றாலும்) படத்தின் main characters இருவரும் மாறி மாறி கதை சொல்வது முற்றிலும் புதிய கோணம்.

படத்திற்கு முதலில் "TN 01 1386" என்று தலைப்பு வைத்திருந்தார்களாம். நமது தமிழக அரசின் லூசுத்தனமான சட்டத்தினால், பொல்லாதவனாகி, just ஒரு தனுஷ் படம் போல் மாயை உருவாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல படங்களுக்காகவாவது rule'ஐத் தளர்த்தலாம்.

2 comments:

  1. //நமது தமிழக அரசின் லூசுத்தனமான சட்டத்தினால், //

    அது என்னங்க லூச்சுத்தனமான சட்டம்? கண்டிக்கிறேன். தமிழ்ல பேரு வையின்னு அரசு கட்டாயப்படுத்துதா என்ன? தமிழ்ல பேர் வைச்சா வரி குறையும்னு சொன்னது. தன் படைப்பின் மேல் அந்த அளவு காதல் இருந்தா இயக்குநரும் தயாரிப்பாளரும் வரிச்சலுகை பெறாமல் வேண்டிய பெயரை வைச்சுக்க வேண்டியது தானே?

    ReplyDelete
  2. @anony... தமிழக அரசு இந்த மாதிரி ஒரு சட்டம் போட்டதால, எத்தனை கோடி வருமானம் நஷ்டமாகுதுன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? சாதாரண மனிதன் மட்டும் service tax'லிருந்து, income tax வரைக்கும் எல்லாத்தையும் கட்டணும்... கோடிக்கணக்குல போட்டுப் படம் எடுக்குற சினிமாக்காரங்க மட்டும் ஒண்ணும் கட்ட வேண்டாம்னு சொல்றதே ஒருவித ஓரவஞ்சனை இல்லையா? அது சரி... படிப்புல இருந்து, வேலை வரைக்கும் இட ஒதுக்கீடு/உள் ஒதுக்கீடுன்னு குடுத்துட்டு இருக்குற govt கிட்ட இருந்து வேற என்ன எதிர் பார்க்க முடியும்?

    /* தன் படைப்பின் மேல் அந்த அளவு காதல் இருந்தா இயக்குநரும் தயாரிப்பாளரும் வரிச்சலுகை பெறாமல் வேண்டிய பெயரை வைச்சுக்க வேண்டியது தானே? */
    தன் படத்தின் மீது இயக்குனருக்கு வேண்டுமானால் காதல் இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளருக்கு? பணம் சம்பாதிக்கணும்கிற காரணத்தால தான அவங்க தயாரிப்பாளரா இருக்காங்க? அப்படி இருக்கிறப்போ, இயக்குனர் விரும்புனா கூட எத்தனை தயாரிப்பாளர்கள் தமிழ் இல்லாத பெயர் வைக்க சம்மதிப்பார்கள்??

    பி.கு: நீங்க login பண்ணலைன்னா கூட பரவாயில்லை... தயவு செய்து உங்க பேரை மட்டுமாவது பதிஞ்சிட்டு போங்க...

    ReplyDelete