Thursday, November 29, 2007

LTTE'இன் அராஜகம் தொடர்கிறது...

LTTE'க்கு support செய்யும் மக்களே.... கொஞ்சம் இந்த news'ஐயும் பாக்குறீங்களா?

20 killed in Colombo blasts

Blast shows change in LTTE tactics

எனக்கு ஒன்று தான் புரியவில்லை... அது என்ன... LTTE உடன் நடக்கும் சண்டையில் Srilankan govt bomb போடும் பொழுது தமிழர்கள் இறந்தால் மட்டும் மல்லுக்கட்டும் LTTE ஆதரவாளர்கள் இந்த மாதிரி LTTE'இன் retaliation attack'ஆல் civilians இறந்தால் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்? எல்லா உயிரும் உயிர் தானே? அப்பாவி சிங்களர்கள் இறந்தால் அதைப் பற்றி கவலை இல்லையா?

LTTE ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம்(தமிழர்களுக்கும் சம உரிமை வேண்டும்) நல்லதாக இருந்தாலும், போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தனி ஈழம் என்ற வறட்டுப் பிடிவாததிற்க்கும், அரசியல் பழிவாங்குதல்களுக்கும், தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளவும், சிறுவர்கள் கையிலும் ஆயுதங்களைக் கொடுக்கவும் என்று தடம் புரண்டது தான் மிச்சம்.

ராஜீவ் காந்தியைக் கொன்று, (அவர் ஒன்றும் காமராஜர் போல் உத்தமர் இல்லையெனினும்) அதன் மூலம் இந்தியாவில் எப்பொழுதும் நிலையில்லா அரசுகளை ஏற்பட வைத்து, இந்தியாவின் வளர்ச்சியை சில வருடங்கள் பின்னோக்கித் தள்ளிய LTTE'க்கு கவிதையாம், poster'ஆம்... கருமம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!

சிங்கள அரசுக்கு இருப்பது(இருந்தது?) மட்டும் இனவெறி அல்ல... தமிழ், தமிழர் என்று சொல்லி அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் LTTE'க்கும், அதன் supporters'க்கும் இருப்பது கூட இனவெறி தான்! கேட்டால் கலைஞர் போல், "இனவெறி தமிழுக்கு என்றால் வரவேற்போம்" என்பார்கள்... சுஜாதா பாணியில் சொல்வதானால், மனிதத்தை விட தமிழ் உயர்ந்தது என்று நினைக்கும் இவர்களைப் பசித்த 'புலி' உண்ணட்டும்.

Saturday, November 24, 2007

விஜயகாந்தின் மேல் உள்ள நம்பிக்கை வலுக்கிறது!!

www.dinamani.com->archives->18th Nov 2007->DinamaniPlus->Arasiyal->Manasaatchi thaan enathu kolgai, vazhikaatti

(ஏன் தினமணி ஒரு fixed link தருவதில்லை என்று தான் புரியவில்லை. Full architecture'ஐயும் மாற்ற வேண்டும் தான். ஆனால் படிப்பவர்களுக்கு link கொடுக்க easy'ஆக இருக்குமே!)

முதல்ல நான் விஜயகாந்தை movies'ஓட influence'னால அரசியல்ல ஒரு comedian'ஆகத் தான் பாத்துட்டு இருந்தேன். ஆனால் அவரோட views எல்லாம் உண்மைலயே ரொம்ப தெளிவா இருக்கு. முக்கியமா "நமது தேவைகள் AC room'உம், car'களும் அல்ல... உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்ய தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள் தான்", "விவசாயத்துக்கு அதிக மானியம் கொடுக்கப் பட வேண்டும். அதே நேரம் விவசாயிகளைப் பாதிக்காத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுவதை வரவேற்கவும் வேண்டும்.", etc... போன்ற கருத்துக்கள்... உண்மையில் சபாஷ் சொல்லத் தோன்றுகிறது... எனக்குத் தெரிந்து வேறு எந்த அரசியல்வாதியும் இந்த மாதிரி விவசாயிகளையும் கழட்டி விடாமல், SEZ'ஐயும் பலி கொடுக்காமல் பொதுவான ஒரு கருத்து சொன்ன மாதிரி தெரியவில்லை. எல்லோருக்கும் தெரிந்த கருத்து தான். ஆனால், யாரும் செயல் படுத்தத் தான் வரவில்லை. எனக்கு என்னமோ, விஜயகந்த்க்கு ஒரு chance குடுத்துப் பார்க்கலாமோ என்று தான் தோன்றுகிறது!! ஆனால், இந்த போலி திராவிடக் கட்சிகளின் கையில் சிக்கியுள்ள நமது மக்கள், இந்த மாற்றத்தை practical ஆக்குவார்களா என்று தான் தெரியவில்லை!!ஆக்க வேண்டும்! இப்போது இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஒரே மாற்று விஜயகாந்த் தானே!!

Thursday, November 15, 2007

Roads -- Nov 2007 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/10/pit_31.html

தலைப்பு Roads என்று இல்லாமல் பாதை என்று இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் creative'ஆக fotos எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :-)

முதல் இரண்டும் போட்டிக்கு... (தயவு செய்து fotos'ஐ click பண்ணி வேறு window'வில் பார்க்கவும்... எனது blog'ன் backround image'ல் படங்கள் சரியாகத் தெரிய மாட்டங்குது!!)

இது மும்பை CST அருகில்.... (முழுவதும் shadows increase செய்தது)Original img: http://picasaweb.google.com/luvathi/Mumbai02/photo#5108216043115136658

இது சென்ற வாரம் கொடநாடு viewpoint'ல் இருந்து திரும்பும் போது எடுத்தது... (just made it as B&W)

அடுத்தது Murud Janjira போகும் போது எடுத்தது. (again increased the shadows a little bit)Original img: http://picasaweb.google.com/luvathi/MurudJanjira/photo#5108658042494541682
இது கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை போகும் வழியில் எடுத்தது... (கொஞ்சம் crop செய்து shadows increase செய்திருக்கிறேன்) Original img: http://picasaweb.google.com/luvathi/Vaalpaarai/photo#5085836581338982354
கடைசியாக சென்ற வாரம் ஊட்டி போன போது, try பண்ணி பண்ணி, தோற்றுப் போன shot'களில் ஒன்று.... (croped the img and increased the shadows a little)

Tuesday, November 13, 2007

விடுதலைப்புலிகளின் அராஜகம்...

http://www.dinamani.com/ -> ஆவணங்கள் -> 12th Nov 2007 -> தமிழகம் -> விடுதலைப்புலிகள் மீண்டும் டீசல் பறிப்பு.

விடுதலைப்புலிகள் மீண்டும் diesel பறித்துச் சென்றிருக்கிறார்கள், ராமேஸ்வரம் மீனவர்களிடமிருந்து. ராணுவ உடையில் வந்து பறித்தது மட்டுமல்லாமல், கண்ணாடி bottle'ஐயும் வீசிவிட்டு, இனிவரும் காலங்களில் oil & petrol கொடுத்து விட்டுத் தான் மீன் பிடிக்க வேண்டும் என்றும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

LTTE'ஐப் பொறுத்த வரை ஈழத்துத் தமிழர்கள் மட்டும் தான் வாழ வேண்டுமா? மற்றவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் இவர்களின் செயல்களுக்கு LTTE ஆதரவாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுக்கு என்ன... எப்பொழுதும் இலங்கை அரசு தவறு செய்தால் மட்டும் தான் கண்டிக்கத் தெரியும்! இந்த செயல்களுக்கு வாய் மூடி மௌனமாகத் தானே இருக்கப் போகிறார்கள்!! இல்லையென்றால் LTTE'க்கு வேறு வழி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை அரசின் சில செயல்களையும் இதே போல் நியாயப் படுத்திவிட முடியும்.

நமது இந்திய மக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்துடன் போராடும் LTTE'க்கு ஆதரவாக இங்கு பொதுக்கூட்டம் போடுவதும், கவிதை எழுதுவதும் வெட்கக் கேடு!!

Tuesday, November 06, 2007

செல்லாவிற்கு மறுமொழிகள் -- Vijay TV நீயா நானா?

எனக்கு forward வந்தது... செல்லாவின் latest blog... முதலில் அந்த link... http://osaichella.blogspot.com/2007/11/blog-post_05.html

கீழே உள்ளவை என் மறுமொழிகள் ...

எனக்கு இப்பவும் ஒண்ணு மட்டும் புரியவே மாட்டங்குது … அந்த நிகழ்ச்சியில அந்த பொண்ணு பேசிய விதம், நிச்சயமா கண்டிக்கப் பட வேண்டியது. பொளேர்னு அறையணும் போல தான் தோணிச்சு!! எத்தனையோ நிகழ்ச்சிகளில், ஏதாவது யாராவது mention பண்ணினால், அந்த வார்த்தையை மட்டும் cut செய்யும் Vijay TV(இதற்கு முன் எத்தனையோ முறை நீயா நானாவில் கூட இது நடந்திருக்கிறது!), இதையும் cut பண்ணி இருக்கலாம் சரி… அதை விடுங்கள்..

But, எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேரு சாதி மாறி கல்யாணம் பண்றதை ஆதரிக்கலை. அந்த programme’லேயே ஒரு அம்மா, தன்னோட பையனை ஜாதி மாத்தி திருமணம் செய்ய மாட்டேன். ஏன்னா, என்னோட ஜாதி எனக்கு உயர்ந்ததுனு எல்லாம் பேசினாங்க. ஒரே வித்தியாசம், தன்னோட ஜாதி எண்ணங்கிறதை அவங்க சொல்லலை. இந்த ஒரு காரணத்தை வச்சே, again Brahmins மேல தாக்குதல் டுக்குறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு புரியலை. மத்தவங்க பேசுறதையே Brahmins’ம் பேசுனா, ஏன் அவங்களை மட்டும் கண்டுக்கிறாங்க? ஏன், தங்களுக்கு சாதகமா, மத்த ஜாதிகளை சேர்ந்தவங்க பேசுறதை ஓரம் கட்டுறாங்க?? அதுவும் இந்த மாதிரி ஒரு பொண்ணு பேசுனதை மட்டும் வச்சி, total'ஆ மறுபடியும் Brahmins மட்டும் தான் இப்படின்னு பேசுறதுல என்ன நியாயம் இருக்கு?

அது போகட்டும்… எங்க வீட்டுல இந்த programme அப்போ என் நண்பன் ஒருவனால் கேட்கப் பட்ட ஒரு கேள்வி... “நான் தமிழனா பிறந்ததற்கு, பெருமை படுகிறேன்னு ஒருத்தன் சொன்னா தப்பு இல்லை. நான் ____ ஜாதியை சேர்ந்தவனா இருக்கப் பெருமைப் படுகிறேன்னு சொல்றது மட்டும் தப்புன்னு சொல்றது எந்த வகையில் நியாயம்?"

ஞானி சொன்ன மாதிரி, “நான் இந்தியன்னு சொல்லிக்கிறதே கூட, ஒரு வகையில் கொஞ்சம் முன்னேறிய ரீதியில் ஜாதி பற்றி பேசுவது தான்.

மனுஷங்களை மனுஷங்களா பாக்காத வரைக்கும், அந்த பொண்ணு, அந்த lady மாதிரி சுய தம்பட்டம் அடிக்கிறவங்களும் இருப்பாங்க. இந்த Chella மாதிரி, அதை(மட்டும்) கண்முடித் தனமா குறை சொல்றவங்களும், அதை ஏதோ Brahmins மட்டும் தான் செய்யிற மாதிரி ஒரு மாயை create பண்ணி forward செய்யிறவங்களும் இருக்கத் தான் போறாங்க. :-)