Saturday, November 24, 2007

விஜயகாந்தின் மேல் உள்ள நம்பிக்கை வலுக்கிறது!!

www.dinamani.com->archives->18th Nov 2007->DinamaniPlus->Arasiyal->Manasaatchi thaan enathu kolgai, vazhikaatti

(ஏன் தினமணி ஒரு fixed link தருவதில்லை என்று தான் புரியவில்லை. Full architecture'ஐயும் மாற்ற வேண்டும் தான். ஆனால் படிப்பவர்களுக்கு link கொடுக்க easy'ஆக இருக்குமே!)

முதல்ல நான் விஜயகாந்தை movies'ஓட influence'னால அரசியல்ல ஒரு comedian'ஆகத் தான் பாத்துட்டு இருந்தேன். ஆனால் அவரோட views எல்லாம் உண்மைலயே ரொம்ப தெளிவா இருக்கு. முக்கியமா "நமது தேவைகள் AC room'உம், car'களும் அல்ல... உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்ய தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள் தான்", "விவசாயத்துக்கு அதிக மானியம் கொடுக்கப் பட வேண்டும். அதே நேரம் விவசாயிகளைப் பாதிக்காத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுவதை வரவேற்கவும் வேண்டும்.", etc... போன்ற கருத்துக்கள்... உண்மையில் சபாஷ் சொல்லத் தோன்றுகிறது... எனக்குத் தெரிந்து வேறு எந்த அரசியல்வாதியும் இந்த மாதிரி விவசாயிகளையும் கழட்டி விடாமல், SEZ'ஐயும் பலி கொடுக்காமல் பொதுவான ஒரு கருத்து சொன்ன மாதிரி தெரியவில்லை. எல்லோருக்கும் தெரிந்த கருத்து தான். ஆனால், யாரும் செயல் படுத்தத் தான் வரவில்லை. எனக்கு என்னமோ, விஜயகந்த்க்கு ஒரு chance குடுத்துப் பார்க்கலாமோ என்று தான் தோன்றுகிறது!! ஆனால், இந்த போலி திராவிடக் கட்சிகளின் கையில் சிக்கியுள்ள நமது மக்கள், இந்த மாற்றத்தை practical ஆக்குவார்களா என்று தான் தெரியவில்லை!!ஆக்க வேண்டும்! இப்போது இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஒரே மாற்று விஜயகாந்த் தானே!!

No comments:

Post a Comment