Tuesday, December 18, 2007

கல்லூரி -- விமர்சனம்

எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)

என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!

முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)

Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)

இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.

படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!

என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!

ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.

2 comments:

  1. >>>> ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை <<<<

    அட..நெனச்சத்தை அப்படியே சொல்லீட்ட. ..மச்சான் .. ஒரு முழுமையடயதது படத்தோட ஒரு குறை தான் ..

    >>>>> இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல <<<<

    எத்தனையோ பேரை நாம இப்படி பார்த்திருப்போம் .. அத்தனை பேரையும், அவர்கள் இப்படி திரிந்ததையும் .. பின் எப்படி மாறிப்போய் .. அட.. அத்தனையும் மனசுக்குள்ள Flashback ஓடிடுச்சு மச்சான் ..


    >>> அதுக்கு தயார் பண்ணிடனும். <<<<
    >>>>படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது<<<

    இது சரிதான் , ஆனால் இப்படி பார்வையாளர்களை தயார்படுத்திச்செல்லுவதே சினிமா முறை கிடையாது .. அது ஒரு சுவாரசியமான கதை சொல்லும் முறை , ஆனால் பருத்திவீரன் மாதிரி படங்கள் , அந்த சடாரேன்ற எதிர்பாராத முடிவு ஒரு அதிர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியதை போல இந்த முடிவு ஏற்ப்படுத்த தவறுகின்றது ..

    பிதாமகன், சேது , நந்தா , பருத்திவீரன் , காதல் போன்ற படங்கள் , அந்த எதிர்பாராத அதிர்ச்சி முடிவை மிகவும் வலியுடன், நீண்ட நேரம் , ஆகா சொல்லியது போல் இல்லாததும் இந்த முடிவின் ஒரு பின்னடைவு ..

    அடடா இப்படி நிகழ்ந்துவிட்டதே என நாம் நினைப்பதற்குள் , அத்தனையும் முடிந்து விட்டு... அதனால் ஏற்படும் இழப்புகளை, வலியை விலாவரியாக பதியாது என்ன காரணமோ தெரியவில்லை .. ஆனால் அதுதான் படத்தை நம் மனதின் ஆழத்தில் பாதிக்காமல் போனதற்கு காரணம் ...

    ReplyDelete
  2. மச்சான்... நீ சொல்ற படங்கள்ல, முடிவுகள் எதிர்பாராம இருக்குற படங்கள்ல, அந்த அதிர்வை தாங்குற அளவுக்கு மக்களைத் தயார் படுத்தியிருப்பாங்க... ie: அந்த முடிவுக்கு ஒரு justification இருக்கும். He deserves for the end. (காதல் வேறு மாதிரி... He doesnt deserve the end... ஆனால், அவ்வளவு powerful'ஆன அப்பாவுக்கு முன் அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கிட்டத் தட்ட, கடைசி 30 நிமிடங்களில் காட்டியிருப்பார் director.)

    மற்றபடி, இங்கு... நீ சொல்லியது மாதிரி, climax ஆரம்பமாவதும் தெரியவில்லை, முடிவதும் தெரியவில்லை... அதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதற்கு ஒரு காரணம்!!

    ReplyDelete