வர வர நம்ம PIT'ல conceptual'ஆன தலைப்புகள் வர ஆரம்பித்து விட்டது. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். :-)
தனிமை... இந்த topic'ல நாம தான் நிறைய fotos எடுத்திருப்போமேன்னு யோசிச்சிட்டு சரி... இந்த தடவை வேற ஏதாவது வித்தியாசமா try பண்ணலாம்னு யோசிச்சி(?) எடுத்தது தான் கீழ இருக்குற ரெண்டு படங்களும்.
முதல் படம் போட்டிக்கு... உஷ்.... அப்பப்பா... இந்த foto'வுக்கு மக்களை pose குடுக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடிச்சி. உங்க face'லாம் எடுக்க மாட்டேங்க... திரும்பி உக்காந்தா போதும்னு ஒவ்வொரு lovers கிட்டயா கேட்டு செருப்படி வாங்காத குறையா திரும்பிப் போகலாம்னு யோசிச்சிட்டு(அட... யோசிக்கிரதை விட மாட்டானாப்பா இவன்?) இருந்தப்போ தான் பளிச்சின்னு ஒரு idea... lovers தான ஒத்துக்க மாட்டாங்க... நாம ஏன் married couple கிட்ட கேக்க கூடாதுன்னு ஞானோதயம் வந்திச்சு. கும்பிட போன தெய்வம் மாதிரி இந்த couple வந்தாங்க... அப்புறம் அந்த uncle-aunty(தாத்தா பாட்டின்னு கூப்பிடக் கூடாதாம்) :-) எல்லாரும் ரொம்ப பொறுமையா உக்காந்து pose குடுத்தாங்க. அவர்களுக்கு எனது நன்றிகள்.
இரண்டாவது படம்... அந்த glass and its reflection'ஐ மட்டும் concentrate பண்ணி ஒரு தண்ணி அடிக்கிற மனுஷனோட தனிமையை எடுக்கனும்னு நினைச்சேன்... அந்த அளவுக்கு வரலை.
முதல் படத்தை click பண்ணி கொஞ்சம் பெருசா பாருங்களேன்.

