Showing posts with label Tamil movie. Show all posts
Showing posts with label Tamil movie. Show all posts

Tuesday, December 18, 2007

கல்லூரி -- விமர்சனம்

எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)

என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!

முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)

Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)

இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.

படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!

என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!

ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன் -- விமர்சனம் அல்ல

இந்தப் படத்திற்கு நான் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இந்தப் படத்திற்கு ஏன் 34 awards என்று தான்.

Camera ரொம்ப அழகாக இருந்தது... அதுவும் நிறைய scenes side lighting தான். (முகத்தின் ஒரு பகுதி மட்டும் தான் lighting இருக்கும்.) ஒரு best shot என்று கூட சொல்லலாம்... மாதவன் அந்த படம் வரையும் பையனுடன் இரவில் பேசும் scene'ன் அந்த camera angle'ஐ... Just Class!! :-) (அந்த இடத்தில் வசனங்களும் ரொம்ப அருமை)

மற்றபடி இந்தப் படத்தின் script ரொம்பவும் வித்தியாசமான ஒரு script'ஆக எல்லாம் எனக்குத் தோனவில்லை. நாம் GentleMan'லிருந்து அந்நியன் வரை பார்த்துப் பழகிவிட்ட ஒரு script தான். என்ன ரொம்பவும் யதார்த்தமான script. அந்த மாதிரி ஒரு situation யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் அந்த மாதிரி react பண்ணலாம். அது ஒன்று தான் படத்தின் பலம்.

சில விஷயங்களை, நாம் கண்டும் காணாமல் விட்டு விடும் விஷயங்களைப் பற்றி, படம் எடுத்ததற்காக இயக்குனர்க்குப் பாராட்டுகள். இது தான் இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டிய விஷயம். இன்றைய தினமணியில் ஒரு தலையங்கம்... "பெரிய level'ல் நடக்கும் ஊழல்கள் எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், சிறு சிறு level'ல் traffic police'லிருந்து RTO office வரை நடக்கும் ஊழல்களால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப் படுவதால் தான் அவை பெரிதாகத் தெரிகின்றன." அப்பட்டமான உண்மை. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிப் பார்த்தால், நாமும் எவ்வளவோ இடத்தில் நமக்கு ஏற்ற மாதிரி law'ஐ adjust செய்து கொள்ளப் பழகிவிட்டோம் என்று கூட சொல்லலாம். அது தான் 'No parking' sign இருந்தும் park பண்ணுவது, etc. Traffic signal'ல் red இருந்தால் கூட தாண்டிப் போவது போல்... இல்லாவிட்டால் பின்னால் வரும் தண்ணி lorry'ல் அடிபட்டு சாக வேண்டும். நம்மை விட பலசாளியிடம் இருந்து தப்ப நாமும் தப்பு பண்ண வேண்டியிருக்கிறது.

இதற்கெல்லாம் எதிராக ஒருவன் கிளர்ந்தெழுந்தால் (real life'லும்) என்னவாகும் என்பது தான் இந்தப் படம். As a movie'ஆக இதை என்னால் ஒரு சிறந்த படமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நல்ல கருத்தை சொல்லிய படம் என்ற பார்வையில் உண்மையில் இதுவும் ஒரு நல்ல படமே...

ஆனால் படம் பார்த்த எத்தனை பேருக்கு இது தவறு என்று புரியப்போகிறது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் தவறு செய்பவர்கள் நாம் தானே! நம்மை பற்றிய தவறுகளை நாம் எப்போது ஒப்புக்கொண்டோம்? உண்மையில் theatre'க்கு வந்தவர்களும் சில scenes'ல் maddy loose தனமாக நடப்பதாகத் தான் கத்தினார்கள். ஏன்... இவ்வளவு பேசும் நானும் கூட அப்படித்தான் யோசித்தேன். என்ன ஒரே ஒரு வித்தியாசம்.. கத்தவில்லை. யோசிக்க மட்டும் செய்தேன்... யோசித்தேன் என்றால், maddy செய்வது சரி என்று தான் எனக்கும் படுகிறது... ஆனாலும், அதை ஏன் loose தனம் என்று எனது practical mind சொல்கிறது என்றும் யோசித்தேன்.

உண்மையில் இப்படி ஒரு life வாழ்வதற்காக நாம் எவ்வளவு compromise செய்ய வேண்டியிருக்கிறது? இதற்கான மாற்றம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்வி தான் எல்லார் மனதிலும் வழக்கமாக எழுவது... Atleast, நாம் நம் அளவில் சரியாக இருக்கலாமே... நம்மால் முடிந்த அளவிற்கு... தண்ணி lorry'ல் அடி படாத அளவிற்கு! மாற்றம் தானாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது.

Saturday, December 08, 2007

பொல்லாதவன் -- விமர்சனம்

சில படங்களை அதிக expectations'னோடு பார்க்கப் போவோம். சுத்தமாக ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை friends யாராவது நல்லா இருக்குன்னு சொன்னதால பார்க்கப் போவோம்.எதிர்பாராத ஆர்ச்சரியங்கள் காத்திருக்கும். முதலாவதற்கு eg ராமேஸ்வரம். இரண்டாவதற்கு இந்தப் படம்.Correct'ஆக சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் போகலாம் என்று கடைசி நிமிடத்தில் தான் முடிவெடுத்தேன். So, title card வேறு miss ஆகி விட்டது. படம் முடிந்து வெளிவரும் பொழுது, கொஞ்சம் சீக்கிரம் படத்திற்கு வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது என்னவோ உண்மை. :-)

இந்தப் படத்தை எல்லாரும் Bicycle thieves உடன் compare பண்ணினார்கள். ஆனால் City of God உடன் compare பண்ண வேண்டிய படம் இது. (புதுப்பேட்டை படத்திற்கும் City of God'ற்கும் சம்பந்தமே கிடையாது. புதுப்பேட்டை முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப் பட்ட படம். Gangsters பற்றிய படம் என்றாலே City of God என்றால், City of God'ஐயும் God Father உடன் தான் compare பண்ண வேண்டும்)

பொல்லாதவனின் கதை City of God மற்றும் Bicycle Theives இரண்டையும் சேர்த்து எடுக்கப் பட்டது. கொஞ்சம் Munich touch கூட இருந்தது. படத்தின் base story Bicycle theives. இடையில் வரும் சம்பவங்களுக்கு inspiration City of God. கடைசியில் அவர்கள் குடும்பத்திற்கு வந்த பயத்தைக் காட்டும் பொழுது inspiration Munich.ஒரு gangster movie'ஐ கொஞ்சம் lively'ஆக எடுத்த விதத்திற்காக director வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். அதுவும் தனுஷ் bike'ஐத் தொலைத்து விட்டு, அதை கண்டெடுக்கப் போகும் இடங்களெல்லாம் ஒரு உண்மையான gansters இடத்திற்குத் தான் வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது. மதுரையில் படிக்கும் போது எனது wallet'ஐத் தொலைத்து விட்டு ஒரு அசட்டு தைரியத்தில் நண்பன் Suku'வையும் கூட்டிக்கொண்டு திடீர் நகருக்குள் நுழைந்தது தான் ஞாபகம் வந்தது. :-)

Director வெற்றி மாறன், BaluMahendra'வின் assistant'ஆம். Camera'ஐப் பார்த்தாலே தெரிந்தது. ரொம்ப different angles, ரொம்ப different'ஆன movements. படத்தின் starting'ல் தனுஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் scene'ல் camera'வும் ஆடிக்கொண்டே இருக்கும். இது போக சில இடங்களில் கண்ணுக்கு உறுத்தாத camera shakes. ie: light'ஆக scene இடம்வலமாக ஆடிக்கொண்டிருக்கும் அல்லது handheld camera'வாக இருக்கும். தனுஷ் தப்பித்து ஓடும் அந்த குறுக்கு சந்தில் எவ்வளவு தூரம் continuous shot என்று கவனித்தாலே cinematography'க்கு டைரக்டர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ரொம்ப natural lighting வேறு. ஒரு Counsiler'இன் கொலையை இவ்வளவு beautiful'ஆகவும் எடுக்க முடியுமா!! camera'வைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் தெரிகிறது. நிறைய scenes, ie: 1 or 2 seconds'ல் வந்து போய் விடக்கூடிய scenes'க்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று. காக்க காக்க இளா அண்ணனைக் கொல்லும் அந்த scene... அப்பா... உண்மையில் இப்படி எல்லாம் camera'வை handle செய்ய முடியுமா என்ன!! பிறகு அந்த கடைசி fight... வெறும் Frames per second'ஐ வைத்துக் கொண்டு graphics effect கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த red tone படத்தின் உண்மையான நிறத்தைச் சொல்கிறது. இப்பொழுது தமிழ் film industry technical aspect'ல் ரொம்ப முன்னேறி விட்டது. எனவே மணிரத்னம், செல்வராகவன் மாதிரி directors படம் எடுத்தால் தான் cinematography'ல் வித்தியாசம் காண்பிக்க முடிகிறது. அந்த வித்தியாசத்தை வெற்றி மாறனும் காட்டி இருக்கிறார்.

Music G.V. Prakash... பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. Already MSV கலக்கி எடுத்த பாடலை அவரை விடவும் நன்றாகபோடுவதென்பது முடியாத காரியம் தான். ஆனால் re-recording நன்றாக இருந்தது. முக்கியமாக அந்த ganster leader பேசும் போதெல்லாம் அடக்கி வாசித்தது...!

Dialogues & Audiography ரொம்பவும் அருமை. நாம் normal'ஆக கேட்காத dialogues. "அந்த கண்ணால என்னைப் பார்க்காதடா"னு சொல்லிக்கொண்டே கண்ணைக் குத்துவது... தனுஷின் சிறு சிறு love dialogues. ரொம்ப யதார்த்தமாக இருந்தது.

Editor யாரு.. Sreegar Prasad'ஆ? படத்தின் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம். முடிந்த வரை காதலைத் தவிர்த்து Gansters'ஐப் பற்றி கதையை நகர்த்திச் சென்ற விதம் அற்புதம். என்ன, யோசிக்காமல் பாடல்களையும் கத்திரி போட்டிருக்கலாம். ரொம்பவும் odd'ஆகத் தெரிகிறது. Moreover, படத்திற்குத் தேவையும் இல்லை.

இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம்... அதன் fast paced script தான். அங்கங்கே பாடல்கள் வந்து இம்சை கொடுத்தாலும், அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு அற்புதமான script. அதுவும் இன்னொரு beauty... love scens தவிர்த்து விட்டுப் பார்த்தால் தனியாக ஒரு script. அதை சேர்த்துப் பார்த்தால் கூட கெடாத script. (inspiration தான் என்றாலும்) படத்தின் main characters இருவரும் மாறி மாறி கதை சொல்வது முற்றிலும் புதிய கோணம்.

படத்திற்கு முதலில் "TN 01 1386" என்று தலைப்பு வைத்திருந்தார்களாம். நமது தமிழக அரசின் லூசுத்தனமான சட்டத்தினால், பொல்லாதவனாகி, just ஒரு தனுஷ் படம் போல் மாயை உருவாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல படங்களுக்காகவாவது rule'ஐத் தளர்த்தலாம்.

Monday, October 08, 2007

கற்றது தமிழ் -- கற்றது படம்

சில நாட்கள் முன்பு என் நண்பன் Suku'ம் நானும் பேசிக்கொண்டிருந்தோம். Software industry'ன் இந்த அபரிமிதமான வளர்ச்சி எங்கு கொண்டு போய் விடும் என்று! இந்த படத்திலேயே ஒரு dialogue வரும்... "முந்தில்லாம் சென்னை மாதிரி நகரத்துல குறைந்த பட்ச வருமானம் 2,000 ரூபாய், அதிகபட்சம் 20,000. இப்போ, குறைந்த பட்ச வருமானம் அதே 2,000 தான், ஆனா அதிகபட்சம் 200,000".இந்த dialogue தான் படத்தின் கதை, theme எல்லாமே.


இந்த படத்தின் Script பற்றி சொல்ல வேண்டுமானால் -ve aspect'ல் 'குழப்பமான' என்று சொல்லலாம்... அல்லது +ve aspect'ல் 'brilliant'ஆன என்றும் சொல்லலாம். :-) முதலில் Flashback போல் ஆரம்பித்து, பின் அந்த flashback ஆரம்பித்த இடத்தில் இருந்தே மறுபடி கதையைத் தொடர்ந்து(Flashback'கிற்குள் Flashback!), அதன் பின் Flashback & current incidents என்று மாற்றி மாற்றி காட்டி, மறுபடி அந்த தொடர்ந்த இடத்திற்க்கே வந்து முடிப்பது, தமிழ் cinema'விற்க்குப் புதுசு. ஒரு இரண்டு வார்த்தை பக்கத்தில் திரும்பி பேசினால், கதையின் தொடர்ச்சி புறிபடாமல் போவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குப் பக்க பலமாய் இருப்பது characterisation.

ஜீவாவின் charater தான் படத்தின் உயிர் நாடியே. பொதுவாக நான் reviews எழுதும் போது, நடிப்பு பற்றி எழுதுவது இல்லை. ஆனால் இங்கு என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜீவாவின் நடிப்பு நிச்சயம் அவரை ஒரு புது தளத்திற்க்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதுவும் ஒரு BPO பையனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவர் போதும் ஆட்டம்.. wow!! அடுத்து அஞ்சலி... புதுமுகமாம். சூடம் அடித்தால் கூட நம்ப முடியாது. :-) (I fell in love with her... know???) :-) அப்புறம், அந்த குட்டிப் பையனை விட, அந்த குட்டிப் பெண் ரொம்ப கவர்கிறாள். "நெசமாத் தான் சொல்றியா?" என்று மறுபடி எப்பொழுது கேட்பாள் என்று ஏங்க வைக்கும் நடிப்பு!! :-) படத்தில் மற்றொரு குறிப்பிட்டு சொல்ல வைக்கும் பாத்திரம் தமிழ் வாத்தியாராய் வரும் அழகம் பெருமாள். புதுப்பேட்டைக்குப் பின் மற்றொரு அழகான role. மனுசர் சும்மா பூந்து விளையாடிட்டார்.

இவர்கள் அத்தனை பேரின் charaterisation'ம் அருமை. ஜீவாவிற்க்குள் குடிகொண்ட முரட்டுத் தனத்தை(அல்லது இயலாமையை) முழுவதும் justify பண்ண முடியாததெனினும், அதற்க்காக முயன்றதுக்குப் பாராட்டலாம். கமல், KB படங்களைப் போல் சின்ன சின்ன charaters'ஐயும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் ராம்(director). அந்த roommates, doctor, BPO guy, etc.

பொதுவாக பாடல்கள் ஒரு படத்தின் வேகத்தைக் குறைப்பவையாகவே கருதப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. Script எழுதி முடித்த பின் தான் வியாபார நோக்கத்திற்க்காகப் பாடல்களைப் புகுத்துவார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி எதுவுமே கிடையாது. பாடல்கள் அவ்வளவு அழகாக script உடன் இணைந்திருக்கின்றன. சொல்லப்போனால், பாடல்களைத் தூக்கி விட்டால், script முழுமையே அடையாது. :-)

சில(சொல்லப்போனால் பல) scenes எல்லாம் உண்மையிலேயே room போட்டுத் தான் யோசித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன. முதலில் படம் ஆரம்பிக்கும் போதே இது மற்ற படங்களைப் போல் இல்லை, என்னமோ வித்தியாசமாய் இருக்கிறது என்பது புரிந்து போய் விடுகிறது. அந்த வித்தியாசத்தை இறுதி வரை கொண்டு போனதே director'ன் வெற்றி தான்.

"வாழ்க்கைல நிறைய சின்ன சின்ன அழகான விஷயங்கள் நாம கவனிக்காமலே நம்மளை விட்டு கடந்து போய்டுது" போன்ற அழகான வசனங்கள் படத்தின் மற்றொரு முக்கியமான பலம்.

தமிழ் cinema industry'யில் இளையராஜா, ARR'க்கு அடுத்து Re-recording'ல் பட்டையைக் கிளப்புவது யுவன் தான்(நல்ல directors அமைந்தால்!!). So, இந்த படமும் miss ஆகவில்லை. பாடல்கள், அதில் instruments கையாண்ட விதம் எல்லாம் இளையராஜாவையும் ARR'ஐயும் கலந்து கொடுத்தது போல் இருந்தது. "பறபற பட்டாம்பூச்சியும்", "பறவையே எங்கு இருக்கிறாயும்" மனத்தை விட்டு அகல மறுக்கின்றன.

Director ராம், Balu Mahendra'வின் assistant என்பது cinematography'வைப் பார்த்தாலே தெரியும். கதிர் என்னும் cinematographer. நானும் தான் Maharashtra போனேன், Rajasthan போனேன். ஆனால் இந்த மாதிரி இடங்களை எங்கு தான் பிடிக்கிறார்களோ... என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு தான் புரிந்தது. அது, பார்க்கும் பார்வையில் மட்டும் இல்லை. படம் பிடிக்கும் camera'வும், camera'வைப் பிடிக்கும் கையும் காரணங்கள் என்று! :-)

Editing -- Sreekar Prasad. இந்த மாதிரி, கொஞ்சம் குழப்பமான script'க்கு இந்த மாதிரி தேர்ந்த editor இருந்தால் தான் வேலைக்காகும். ஆனால் climax'ன் கடைசி 20 min'ஐத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி போட்டிருந்தால், படம் 'ரொம்ப' அழகான படமாக வந்திருக்கும்.இப்பொழுதோ, director புலம்புவது போல் ஆகி விட்டது. அந்த bus'ல் இருவரும் செல்லும் போதே முடிததிருக்கலாம்.

சில இடங்களில் ரொம்ப apt'ஆன editing with the song sequences. ஜீவா ஒரு disappointed state'ல் அஞ்சலியை cycle'லில் கூட்டி வருவார். ஒரு இடத்தில் support'காக ஜீவாவின் தோளைப் பிடிப்பாள்... உடன் "முதல் முறை வாழப் பிடிக்குதே" என்ற lines வரும். "முதல் முறை வெளிச்சம் பிறக்குதே" என்ற lines வரும் பொழுது, அந்த train ஒரு இருண்ட tunnel'லில் இருந்து வெளியே வரும்.
ஜீவா வளர்ந்த பின், எல்லா hostel மாணவர்களும், bag எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்புவார்கள். அது 12-ம் வகுப்பு என்பது, பின்னால் கொஞ்சம் out of focus'ல் இருக்கும் கதவில் எழுதி இருக்கும் 12A'ஐ வைத்துக் கண்டு பிடிக்கலாம். இது போல் இன்னும் நிறைய scenes.... நிறைய எழுத வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், அவ்வளவையும் எழுதினால் இன்னும் இரண்டு பக்கத்திக்கு மேல் வேண்டும்.

மொத்தத்தில், climax-ல் கடைசி 20 நிமிடம் தேவையில்லை என்றாலும், script'காக இன்னொரு முறை பார்க்கணும். Cinematography'க்காக மற்றொரு முறை பார்க்கணும். Re-recording'காக மற்றொரு முறை பார்க்கணும். Editing'காக மற்றொரு முறை பார்க்கணும். கடைசியாக Anjali'காக கட்டாயம் மற்றுமொரு முறை பார்க்கணும். :-)

Sunday, September 23, 2007

அம்முவாகிய நான் -- விமர்சனம்

நான் படம் பார்க்கப் போகும் முன் என் நண்பன் ஒருவனிடம் கேட்டேன்... 'படம் எப்படிடா இருந்துச்சு?'. நல்லா இருந்துச்சு, இல்லைன்னு சொல்லலை... "அழகாக இருந்தது"னான். உண்மையில் மிகச் சரியான விமர்சனமும் அது தான், படம் பார்த்த பின் புரிந்தது.

Sathyajit Ray'இன் one of the classic "சாருலதா". தனது கணவனின் தம்பி (என்று நினைக்குறேன்)'இன் மேல் ஈர்ப்பு கொள்ளும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் முதலில் இருந்து கடைசி வரை ஒரு இடத்தில் கூட விரசமான காட்சிகள் இருக்காது. அவ்வளவு அழகாக எடுத்திருப்பார், அதே போல் தான் இந்த படமும்... கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. அதை ரொம்ப தெளிவாக எடுத்ததற்க்காகவே director'க்கு ஒரு ஓ போடலாம்.

இந்த படம் பார்த்து 2 வாரங்கள் ஆகி விட்டன. இதற்கு முன்பு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் (correct'ஆக சொல்ல வேண்டுமென்றால் சோம்பேறித்தனத்தால்) எழுதாமல் விட்ட படங்கள் இரண்டு. கண்ட நாள் முதல், சென்னை 28. அதே நிலைமை இந்தப் படத்திற்க்கும் வந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது எழுதுகிறேன்.ஒரு படத்திற்க்கு என் விமர்சனம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது படிப்பவர்களின் மனத்தைப் பொருத்தது. ஆனால், ஒரு நல்ல படத்திற்க்கு விமர்சனம் எழுதினேன் என்ற திருப்தி எனக்கு இருக்க வேண்டும் இல்லையா? :-)

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் இது வழக்கமான தமிழ் படம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடலாம். Prostitutes என்றாலே கீழ்த்தரமாகப் பார்த்தே(அட... cinema'வுல தாங்க!) பழகி விட்ட நமக்கு, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, self-respect உண்டு என்றெல்லாம் புரிய வைக்கும் போதே அவர்கள் மேல் இருந்த ஒரு மோசமான எண்ணமும் கரைந்து ஓடச் செய்து விடுகிறார் director. அங்கு தான் அவரின் மிகப்பெரிய வெற்றி. ஏனென்றால் படத்தின் மையக்கருவே ஒரு prostitute'ஐ ஒருவன் கல்யாணம் செய்வது தானே! Prostitution'ஐ வைத்து கதை எழுதப்போன இடத்தில் அந்த prostitute'யே மணம் முடிக்கும் முடிவெடுக்கும் போது, பார்வையாளனுக்கு எந்த logical questions'ம் எழாமல் இருந்ததற்க்கு முக்கிய காரணமே இந்த காட்சிகள் தான்.

அதன் பின் பார்த்திபனுக்கு அவள் மேல் அன்பு(காதல்?) வருவதைக் காட்டும் காட்சிகள் எல்லாம் அற்புதம். ஒன்றிரண்டு காட்சிகள் உண்மையிலேயே கவிதைகள் தான். உன்னைத் தொடலாமா என்று கேட்பார் பார்த்திபன். "ம்". தனது ஒரு விரலை அவள் மேல் பட்டுவிடாமலே கையிலிருந்து நெற்றிப்பொட்டு வரை கொண்டு போவார். அப்பொழுது அவள் கண்ணை மூடுவாள். இவர் விரலை எடுத்து விடுவார். அவளோ 2 seconds கழித்து இன்னும் கை அங்கேயே இருக்கிறது என்ற எண்ணத்தில் கையைப் பிடிக்க முயற்சி செய்வாள், கண்ணை மூடிக் கொண்டே... கண் திறந்து பார்த்தால் பார்த்திபன் அமைதியாக அவளின் குறும்பை ரசித்துக் கொண்டிருப்பார்.
இருவருக்கும் கல்யாணம் நடக்கும் காட்சியில் மாலை மாற்றும் பொழுது, நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தை, தரையை நோக்கித் திருப்புவார்(கல்யாணப் பெண் வெட்கப் பட வேண்டுமல்லவா? அவள் தான் prostitute ஆயிற்றே!) அதன் பின் இரண்டாம் பாதியில் பார்த்திபன் கட்டி அணைக்கையில் அவளே தானாக வெட்கப் பட்டுத் தலை குனிவாள். ம்ம்... கவிதை... கவிதை...

இப்படி படம் நெடுக கவிதை தான்.
ஒரு prostitute'ஐத் திருமணம் செய்வதால் ஒரு சராசரி மனிதனுக்கு குடும்பத்தில் எழும் பிரச்சினைகளையும், ஒரு எழுதத்தாளனைத் திருமணம் செய்வதால் ஒரு prostitute'க்கு சமூகத்தில் ஏற்ப்படும் மதிப்பையும் முடிந்த வரை நேர்மையாகப் பதிவு செய்த படம்.

"இவ்வளவு நாளும் மத்தவங்க மகிழ்ச்சிக்காக night எல்லாம் முழிச்சிட்டிருந்த. இன்னைக்கு தான் நீ நிம்மதியா தூங்க போற First Night", போன்ற வசனங்கள் படத்திற்க்கு மிகப்பெரிய plus.

ம்... நல்ல director கிடைத்தால் சபேஷ்-முரளி கூடத்தான் நல்ல music போடுகிறார்கள்! 'உன்னைச் சரணடைந்தேன்', பாடலும் படமாக்கிய விதமும் அருமை. Re-recording'ல் நிறைய இடங்களில் அமைதி காத்து காட்சிகளை இன்னும் அழகாக்கியிருக்கிறார்கள். Editing'உம் நன்றாக இருந்தது. (படம் slow என்றார்கள். எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை) Camera சுமார் தான். காட்சிக்கு வேண்டியதை படம் பிடித்ததிருக்கிறதே ஒழிய, ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.

கடைசி climax மட்டும் cinema தனமாக இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

எது எப்படியோ, படம் முடிந்து வெளியே வரும் பொழுது, 2 நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை அல்லது பேசத் தோன்றவில்லை. அது தான் படத்தின் வெற்றியே!

Friday, June 22, 2007

Sivaji -- The so called Action-packed movie

முதலில் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டுமா என்று தான் நினைத்து இருந்தேன். ரஜினி படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்றால் தமிழ்நாடு தான் என்னை மன்னிக்குமா? ;-)

சிவாஜி - உண்மையில் பேரைக் கேட்டால் அதிராத்தான் செய்கிறது, திரையரங்கும். இந்த வயதிலும் என்ன style! Wow!!

என்னைப் பொருத்த வரை ஷங்கரை பெரிய director'ஆக நான் ஒததுக்கொள்ள மாட்டேன். இந்தியன், முதல்வன் மட்டும் விதிவிலக்கு. எல்லோரும் JentleMan'ஐ சிறந்த படம் என்பார்கள். அந்த நேரத்தில் வந்த ஒரு வித்தியாசமான படம் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய அதை இந்த list'ல் சேர்க்க முடியாது. அந்த இரண்டு படங்களிலும் இந்தியனில் கமல்ஹாசனின் கைவண்ணம் நிச்சயம் இருந்து இருக்கும். முதலவன் சுஜாதாவின் 'பதவிக்காக' நாவலின் சிறிது மாற்றி எடுக்கப் பட்ட கதை. ஆனாலும் இரண்டு விஷயங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். ஷங்கர் ஓரளவுக்கு தேறிய script-writer. இன்னொன்று நல்ல Businessman.
இதில் 'ஓரளவுக்கு' என்று சொல்வதற்க்குக் காரணம் இருக்கிறது. Gentleman'ல் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த ஷங்கர், காதலன் மாதிரி ஒரு டுபுக்கு subject எடுத்து இருக்க வேண்டாம். மறுபடி இந்தியன் மாதிரி ஒரு படம் கொடுத்து விட்டு Jeans எடுத்து இருக்க வேண்டாம். மறுபடியும் முதல்வன் மாதிரி எடுத்து விட்டு அப்படியே script என்றால் என்ன என்பதை மறந்து இருக்க வேண்டாம். Boys படத்துக்கு துள்ளுவதோ இளமை எவ்வளவோ decent movie. அந்நியன் - வெறும் MPD வைத்து ஒட்டப்பட்ட கதை. அதிலேயே logic என்பதைத் தன் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டுத் தான் படம் எடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது சிவாஜி...


ஆனந்த விகடன் பாணியில் சொல்ல வேண்டுமானால் முதல் பாதி கலகல. இரண்டாம் பாதி படபட. Action-packed movie என்பது வெறும் சண்டை மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் brilliance'உம் வேண்டும். காக்க காக்க - best example. ரஜினி படத்திலையே recent time'ல், பாட்ஷாவை சொல்லலாம். வெறும் script மட்டும் படத்தைக் கொண்டு போக முடியும். அது நிச்சயம் சிவாஜியில் missing. Logic என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் படம் பார்ப்பேன் என்று நீங்கள் சொன்னால், முதல் பாதியே எவ்வளவோ better. ரஜினி படத்தில் அதை எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது என்ற புத்திசாலித்தனமான(?) முடிவை நீங்கள் எடுத்து இருந்தால், இரண்டாம் பாதி நன்றாக தான் உள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கரு. எனக்குத் தெரிந்து திரை அரங்கில் counter'ல் யாரும் டிக்கெட் வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. Even, sathyam theatre'லும் முதல் 2 வாரத்துக்கு tickets booked'ஆம். முதலில் எனக்கு தெரிந்த இடத்தில் Rs. 250 சொன்னார்கள்! நிச்சயம் இந்த பணம் Sathyam theatre'க்குப் போகப் போவதில்லை. பிறகு யாருக்கு செல்கிறது? Anyway, தவறு என்பது முதலில் நம்மிடம் இருந்து தானே ஆரம்பமாகிறது? Rent-reciept'க்கு duplicate bill கொடுத்து விட்டு இதைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? படம் 80 கோடி business என்கிறார்கள். 100 கோடி என்கிறார்கள். உண்மையான கணக்கைத் தான் ரஜினியோ, AVM'ஓ வெளியிடுவார்களா ? யாரும் திருந்தப் போவதில்லை. யாரையும் திருந்த விடப் போவதுமில்லை.

சரி படத்துக்கு வரலாம். அந்த கொஞ்சம் போல இருக்கும் அறிவையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து இருக்க வேண்டும். முதல் பாதியில் scenes lively'ஆக இல்லையென்றாலும் lovely'ஆக இருந்தது. இரண்டாம் பாதியில், atleast ரஜினியின் style'ஐ நன்கு exploit பண்ணி இருந்ததால் படம் பார்க்க முடிந்தது.
நமது Finance minister இன்னும் படம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்த நேரத்துக்கு எல்லாம் paper'ல் news வந்து இருக்கும், auditors'ஐ சந்திக்க வேண்டும் என்று. கறுப்புப் பணம் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க இத்தனை எளிய வழி இருக்கும் போது எதனால் இவர்கள் raid நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை ;-) இங்கிருந்து hawala மூலம் தன்னிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை ரஜினி வெள்ளை ஆக்குவது எல்லாம் okay. ஆனால், மறுபடியும் அதே கறுப்புப் பணம் இந்தியாவிற்க்கு உள்ளேயே தானே இருக்கிறது? அழகாக மறந்து மறைத்து விட்ட logic. பேசாமல் ராகுவரன்-ஐ AIMS dean ஆக்கிவிட்டால், இறந்து இரண்டு மணி நேரம் ஆன patients'ஐயும் CPR மூலம் பிழைக்க வைத்து விடலாம்! தயவு செஞ்சு படம் பார்க்கும் போது மூளையை overtime பார்க்க விடாதீர்கள். இல்லாவிட்டால், இந்த மாதிரி கிறுக்குத் தனமான idea'க்கள் எல்லாம் தோன்றும்.


ஆனால் அந்த மொட்டை ரஜினி intro, உண்மையிலேயே class தான் . அந்த climax fight'க்காகவே படம் பார்க்கலாம். படையப்பா வசனம் தான் நியாபகம் வருகிறது. "எத்தனை வயசானாலும் அந்த style மட்டும் அப்படியே இருக்கு!"

பாடல்களில் graphics இல்லை, அல்லது வெளியில் தெரியும் படி இல்லை. So ஷங்கர்-க்கு நன்றி. ஆனால் Shreya'ஐ படம் முழுவதும் அழகாகக் காட்டி விட்டு (தாவணி போட்ட தீபாவளி!), பாடல்களில் உரித்த கோழியாக ஆட விட்டத்தைத் தான் சகிக்க முடியவில்லை. "அழகான குடும்பப் பாங்கான தமிழ் பெண் வேண்டும் " - ரஜினி தான் தாயிடம் கேட்பது. ஆனால், தான் காணும் கனவுப் பாடலகளில், அவளை அரை நிஜாருடன் ஆட விடுகிறார். :-( Camera - ஒரு முக்கியமான matter இந்தப் படத்தில். ரஜினியை இளமையாகவும் காட்ட வேண்டும் . அவரின் சண்டைகளும் style'ஆக இருக்க வேண்டும். இதுக்கு K.V.ஆனந்த் மாதிரி cameraman வேண்டும். Antony போல் editor'உம் வேண்டும். எனக்குத் தெரிந்து recent time'இல் வந்த கொஞ்சம் low light'இல் எல்லாம் எடுக்க பட்ட ரஜினி படம் இதுவாக தான் இருக்க வேண்டும். Rahman முதல் முறையாக ரஜினிக்குக் கொஞ்சம் style'ஆக music போட்டு இருக்கிறார். இந்தப் படத்துக்கு சுஜாதா வசனம் ஏன் என்று தான் எனக்குக் கடைசி வரை புரியவே இல்லை.

hmm... இந்த படத்துக்கு இதுக்கு மேலேயும் time spent பண்ணி review எழுதித் தான் ஆக வேண்டுமா? ஏன் உங்களின் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள்? சிவாஜி பார்க்க வேண்டும் என்பது நாம் பிறக்கும் போதே நமது தலையில் எழுதப் பட்ட விதி. Animation movie எல்லாம் பார்ப்பது இல்லையா? அதில் என்ன logic'ஆ பார்க்கிறோம்? So, go and enjoy the movie. You will become cool. :-)