இந்தப் படத்திற்கு நான் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இந்தப் படத்திற்கு ஏன் 34 awards என்று தான்.
Camera ரொம்ப அழகாக இருந்தது... அதுவும் நிறைய scenes side lighting தான். (முகத்தின் ஒரு பகுதி மட்டும் தான் lighting இருக்கும்.) ஒரு best shot என்று கூட சொல்லலாம்... மாதவன் அந்த படம் வரையும் பையனுடன் இரவில் பேசும் scene'ன் அந்த camera angle'ஐ... Just Class!! :-) (அந்த இடத்தில் வசனங்களும் ரொம்ப அருமை)
மற்றபடி இந்தப் படத்தின் script ரொம்பவும் வித்தியாசமான ஒரு script'ஆக எல்லாம் எனக்குத் தோனவில்லை. நாம் GentleMan'லிருந்து அந்நியன் வரை பார்த்துப் பழகிவிட்ட ஒரு script தான். என்ன ரொம்பவும் யதார்த்தமான script. அந்த மாதிரி ஒரு situation யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் அந்த மாதிரி react பண்ணலாம். அது ஒன்று தான் படத்தின் பலம்.
சில விஷயங்களை, நாம் கண்டும் காணாமல் விட்டு விடும் விஷயங்களைப் பற்றி, படம் எடுத்ததற்காக இயக்குனர்க்குப் பாராட்டுகள். இது தான் இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டிய விஷயம். இன்றைய தினமணியில் ஒரு தலையங்கம்... "பெரிய level'ல் நடக்கும் ஊழல்கள் எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், சிறு சிறு level'ல் traffic police'லிருந்து RTO office வரை நடக்கும் ஊழல்களால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப் படுவதால் தான் அவை பெரிதாகத் தெரிகின்றன." அப்பட்டமான உண்மை. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிப் பார்த்தால், நாமும் எவ்வளவோ இடத்தில் நமக்கு ஏற்ற மாதிரி law'ஐ adjust செய்து கொள்ளப் பழகிவிட்டோம் என்று கூட சொல்லலாம். அது தான் 'No parking' sign இருந்தும் park பண்ணுவது, etc. Traffic signal'ல் red இருந்தால் கூட தாண்டிப் போவது போல்... இல்லாவிட்டால் பின்னால் வரும் தண்ணி lorry'ல் அடிபட்டு சாக வேண்டும். நம்மை விட பலசாளியிடம் இருந்து தப்ப நாமும் தப்பு பண்ண வேண்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் எதிராக ஒருவன் கிளர்ந்தெழுந்தால் (real life'லும்) என்னவாகும் என்பது தான் இந்தப் படம். As a movie'ஆக இதை என்னால் ஒரு சிறந்த படமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நல்ல கருத்தை சொல்லிய படம் என்ற பார்வையில் உண்மையில் இதுவும் ஒரு நல்ல படமே...
ஆனால் படம் பார்த்த எத்தனை பேருக்கு இது தவறு என்று புரியப்போகிறது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் தவறு செய்பவர்கள் நாம் தானே! நம்மை பற்றிய தவறுகளை நாம் எப்போது ஒப்புக்கொண்டோம்? உண்மையில் theatre'க்கு வந்தவர்களும் சில scenes'ல் maddy loose தனமாக நடப்பதாகத் தான் கத்தினார்கள். ஏன்... இவ்வளவு பேசும் நானும் கூட அப்படித்தான் யோசித்தேன். என்ன ஒரே ஒரு வித்தியாசம்.. கத்தவில்லை. யோசிக்க மட்டும் செய்தேன்... யோசித்தேன் என்றால், maddy செய்வது சரி என்று தான் எனக்கும் படுகிறது... ஆனாலும், அதை ஏன் loose தனம் என்று எனது practical mind சொல்கிறது என்றும் யோசித்தேன்.
உண்மையில் இப்படி ஒரு life வாழ்வதற்காக நாம் எவ்வளவு compromise செய்ய வேண்டியிருக்கிறது? இதற்கான மாற்றம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்வி தான் எல்லார் மனதிலும் வழக்கமாக எழுவது... Atleast, நாம் நம் அளவில் சரியாக இருக்கலாமே... நம்மால் முடிந்த அளவிற்கு... தண்ணி lorry'ல் அடி படாத அளவிற்கு! மாற்றம் தானாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
மச்சான் நீயா இந்த கட்டுரை எழுதுனது ? .. அட.. :-) நிஜமாவே அருமையா வந்திருக்கு :-)... உன்னோட பொல்லாதவன் விமர்சனம் படிச்சிட்டு கொஞ்சம் கடி ஆகிடிச்சு... என்னைக்கு நீ ஒப்பிட்டு பார்க்குறதை நிப்பாட்டப்போரனு ...
ReplyDeleteநல்ல வேளை இதை எழுதி தப்பிச்சுட்ட ;-)
:-) ha ha... actually, ஒப்பிட்டுப் பார்ப்பதை இப்போல்லாம் முடிஞ்ச அளவுக்கு கம்மி பண்ணிட்டேன். ஆனா, எல்லா reviews'லயும் இதை Bicycle theives'ஓட ஒப்பிட்டதால எனக்கும் automatic'aa அந்த ஒப்பிடுதல் வந்திடுச்சுன்னு நினைக்குறேன். அவங்க சொல்றது சரியான ஒப்பீடு இல்லைன்னு சொல்ல நினைத்த அதிகப் பிரசங்கித் தனத்தினால் கூட இருக்கலாம்... :-)
ReplyDelete