நான் படம் பார்க்கப் போகும் முன் என் நண்பன் ஒருவனிடம் கேட்டேன்... 'படம் எப்படிடா இருந்துச்சு?'. நல்லா இருந்துச்சு, இல்லைன்னு சொல்லலை... "அழகாக இருந்தது"னான். உண்மையில் மிகச் சரியான விமர்சனமும் அது தான், படம் பார்த்த பின் புரிந்தது.
Sathyajit Ray'இன் one of the classic "சாருலதா". தனது கணவனின் தம்பி (என்று நினைக்குறேன்)'இன் மேல் ஈர்ப்பு கொள்ளும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் முதலில் இருந்து கடைசி வரை ஒரு இடத்தில் கூட விரசமான காட்சிகள் இருக்காது. அவ்வளவு அழகாக எடுத்திருப்பார், அதே போல் தான் இந்த படமும்... கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. அதை ரொம்ப தெளிவாக எடுத்ததற்க்காகவே director'க்கு ஒரு ஓ போடலாம்.
இந்த படம் பார்த்து 2 வாரங்கள் ஆகி விட்டன. இதற்கு முன்பு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் (correct'ஆக சொல்ல வேண்டுமென்றால் சோம்பேறித்தனத்தால்) எழுதாமல் விட்ட படங்கள் இரண்டு. கண்ட நாள் முதல், சென்னை 28. அதே நிலைமை இந்தப் படத்திற்க்கும் வந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது எழுதுகிறேன்.ஒரு படத்திற்க்கு என் விமர்சனம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது படிப்பவர்களின் மனத்தைப் பொருத்தது. ஆனால், ஒரு நல்ல படத்திற்க்கு விமர்சனம் எழுதினேன் என்ற திருப்தி எனக்கு இருக்க வேண்டும் இல்லையா? :-)
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் இது வழக்கமான தமிழ் படம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடலாம். Prostitutes என்றாலே கீழ்த்தரமாகப் பார்த்தே(அட... cinema'வுல தாங்க!) பழகி விட்ட நமக்கு, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, self-respect உண்டு என்றெல்லாம் புரிய வைக்கும் போதே அவர்கள் மேல் இருந்த ஒரு மோசமான எண்ணமும் கரைந்து ஓடச் செய்து விடுகிறார் director. அங்கு தான் அவரின் மிகப்பெரிய வெற்றி. ஏனென்றால் படத்தின் மையக்கருவே ஒரு prostitute'ஐ ஒருவன் கல்யாணம் செய்வது தானே! Prostitution'ஐ வைத்து கதை எழுதப்போன இடத்தில் அந்த prostitute'யே மணம் முடிக்கும் முடிவெடுக்கும் போது, பார்வையாளனுக்கு எந்த logical questions'ம் எழாமல் இருந்ததற்க்கு முக்கிய காரணமே இந்த காட்சிகள் தான்.
அதன் பின் பார்த்திபனுக்கு அவள் மேல் அன்பு(காதல்?) வருவதைக் காட்டும் காட்சிகள் எல்லாம் அற்புதம். ஒன்றிரண்டு காட்சிகள் உண்மையிலேயே கவிதைகள் தான். உன்னைத் தொடலாமா என்று கேட்பார் பார்த்திபன். "ம்". தனது ஒரு விரலை அவள் மேல் பட்டுவிடாமலே கையிலிருந்து நெற்றிப்பொட்டு வரை கொண்டு போவார். அப்பொழுது அவள் கண்ணை மூடுவாள். இவர் விரலை எடுத்து விடுவார். அவளோ 2 seconds கழித்து இன்னும் கை அங்கேயே இருக்கிறது என்ற எண்ணத்தில் கையைப் பிடிக்க முயற்சி செய்வாள், கண்ணை மூடிக் கொண்டே... கண் திறந்து பார்த்தால் பார்த்திபன் அமைதியாக அவளின் குறும்பை ரசித்துக் கொண்டிருப்பார்.
இருவருக்கும் கல்யாணம் நடக்கும் காட்சியில் மாலை மாற்றும் பொழுது, நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தை, தரையை நோக்கித் திருப்புவார்(கல்யாணப் பெண் வெட்கப் பட வேண்டுமல்லவா? அவள் தான் prostitute ஆயிற்றே!) அதன் பின் இரண்டாம் பாதியில் பார்த்திபன் கட்டி அணைக்கையில் அவளே தானாக வெட்கப் பட்டுத் தலை குனிவாள். ம்ம்... கவிதை... கவிதை...
இப்படி படம் நெடுக கவிதை தான்.
ஒரு prostitute'ஐத் திருமணம் செய்வதால் ஒரு சராசரி மனிதனுக்கு குடும்பத்தில் எழும் பிரச்சினைகளையும், ஒரு எழுதத்தாளனைத் திருமணம் செய்வதால் ஒரு prostitute'க்கு சமூகத்தில் ஏற்ப்படும் மதிப்பையும் முடிந்த வரை நேர்மையாகப் பதிவு செய்த படம்.
"இவ்வளவு நாளும் மத்தவங்க மகிழ்ச்சிக்காக night எல்லாம் முழிச்சிட்டிருந்த. இன்னைக்கு தான் நீ நிம்மதியா தூங்க போற First Night", போன்ற வசனங்கள் படத்திற்க்கு மிகப்பெரிய plus.
ம்... நல்ல director கிடைத்தால் சபேஷ்-முரளி கூடத்தான் நல்ல music போடுகிறார்கள்! 'உன்னைச் சரணடைந்தேன்', பாடலும் படமாக்கிய விதமும் அருமை. Re-recording'ல் நிறைய இடங்களில் அமைதி காத்து காட்சிகளை இன்னும் அழகாக்கியிருக்கிறார்கள். Editing'உம் நன்றாக இருந்தது. (படம் slow என்றார்கள். எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை) Camera சுமார் தான். காட்சிக்கு வேண்டியதை படம் பிடித்ததிருக்கிறதே ஒழிய, ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
கடைசி climax மட்டும் cinema தனமாக இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
எது எப்படியோ, படம் முடிந்து வெளியே வரும் பொழுது, 2 நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை அல்லது பேசத் தோன்றவில்லை. அது தான் படத்தின் வெற்றியே!
Sunday, September 23, 2007
அம்முவாகிய நான் -- விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment