Wednesday, September 26, 2007

சேது, கலைஞர், திராவிடம் -- சில கேள்விகள், சில விளக்கங்கள் -- Part I

ரொம்ப நாள்களாக எழுதவேண்டும் வேண்டும் என்று நினைத்துத் தள்ளிப் போய் விட்ட ஒரு விஷயம்... Company'இல் ஒரு forward'க்கு reply அடிக்கையில் இதோ சிக்கிடிச்சியா திராவிடம்-னு கொஞ்சம் நிறையவே எழுதித் தீர்த்து விட்டேன். சொல்லப்போனால், இன்னும் நிறைய எழுதி இருக்க வேண்டும். ஆனால் நிறைய எழுத நினைக்கையில் இது ஒரு சிக்கல்... எதையாவது எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது, எழுத வேண்டும் என்று நினைத்த மற்ற விஷயம் மறந்து போய் விடும். ம்... ஆனாலும் மிச்சத்தையும் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது.

Actually, இதில் திராவிடத்தை மட்டும் cover செய்யவில்லை, கூடவே கலைஞர், பிராமண எதிர்ப்பு, அதையும் எழுதி உள்ளேன். அதைப் பற்றித் தான் அதிகம் எழுதி உள்ளேன் என்று கூட சொல்லலாம். :-)

இது transliteration-ஆக இருப்பதர்க்கு மன்னிக்கவும். Compnay'இல் mail'க்கு அடித்த reply என்பதால் தான் இந்த பிரச்சினை. என்னால் மறுபடியும் எல்லாவற்றையும் தமிழுக்கு மாற்றும் அளவுக்கு நேரமோ, பொறுமையோ இல்லை என்பதால், இந்த முறை மன்னித்துக் கொள்ளவும். :-)

இதில் முதல் paragraph'இல் உள்ளது எனது கேள்விகள்(Blue color). அதற்கு அடுத்தது, எனது நண்பனின் reply(Green color). மறுபடி எனது reply(Blue color). மறுபடி அவனின் மறுப்பு(Green color). அதற்கு எனது பதில்(Blue color).

இதன் அத்தனை parts'உம் ஒரே mail thread'இல் ஓடிய விஷயம். படிக்க எளிதாக இருக்கட்டுமே என்று பிரிதத்துப் போட்டிருக்கிறேன்.

// எல்லாம் okay. சேது சமுத்திர திட்டம் economy’ஐ வளர்க்கட்டும். இல்லை என்று மறுக்கவில்லை. இங்கு கேள்வியே, அதை செயல் படுத்த ராமர் bridge or Adam's bridge or மணல் திட்டை இடித்தால் தான் ஆயிற்று என்று MK கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம் தான் என்ன? அதை இடித்துக் கட்டணும்னா, பெரிய contract’ஆ புடிக்கலாம், அது மூலமா இன்னும் நிறைய சம்பாதிக்கலான்கிற எண்ணம் இல்லாமல் இதற்கு வேறு என்ன தான் காரணம் இருக்க முடியும்?? Moreover, hinduism’ஐத் தாக்கிப் பேசினால், மற்ற minority vote’உம் கிடைக்கும்கிறதால தான!! Tsunami தமிழ்நாட்டைத் தாக்காமல் இருந்ததற்கு அந்த மணல் திட்டும் ஒரு காரணம்னு சொன்னாங்களே… அடுத்த முறை Tsunami வந்து பாதிப்பு பெருசா இருக்கும் போது இவங்களோட குரல் எப்படி இருக்கும்? //

----- எனக்கும் ஒரு விஷயம் புரியல .. சேது சமுத்திரம் திட்டம் ஆரம்பிச்ச உடனே தான் இவங்களுக்கு ராமர் பாலம் (என்னையும் "ராமர் பாலம்"னு சொல்ல வச்சிடாங்களே) னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சுதா.சில பேரு அத ஒரு monument னு சொல்றாங்க , ஒருத்தர் ராமர் பாலத்துக்கு அடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள THORIUM இருக்குனு சொல்றாரு ..ஒருத்தர் tsunami-யை தடுக்கும்னு சொல்றாரு ..இந்த பெருமைய பத்தி எல்லாம் இவங்களுக்கு இப்போ மட்டும் எப்படி தெரிஞ்சுதுனு தெரில . இந்த பெருமைய tsunamai வந்த உடனே சொல்லி இருக்கலாமே . moreover நீங்க சொல்றத பாத்தா தமிழ்நாட்டை tsunami'யே தாக்கலன்னு சொல்ற மாதிரி இருக்கு . பல ஆயிரம் பேரு tsunami'ல இறந்து போனதை எப்படி இப்படி பொத்தம் பொதுவா tsunami தாக்கவே இல்லன்றதும் , அத தடுத்தது ராமர் பாலம் தான்னு மனசாட்சியே இல்லாம பேசுறீங்கன்னு புரியல.பாபர் masjid இடிக்கப் படும் போது நீங்க எல்லாம் எங்க போயிடீங்க .அப்போ எதிர்ப்பு போராட்டம் ..கடை அடைப்பு ..petrol குண்டு வீச்சுனு RSS , sanga parivar எல்லாம் போராட்டம் நடத்தி இருக்கலாமே .("அது சரி babar masjid இடிச்சதை தங்களோட life time achievement-ஆ நெனைச்சிட்டு இருக்காங்க நீ வேற இன்னும் சின்னப் புள்ளத்தனமா பேசிட்டு இருக்கியே " னு எனக்குள்ள ஒரு குரல் சொல்லிச் சொல்லி சிரிக்குது ! ! )

நீங்க சொல்ற மாதிரி கருணாநிதி கொள்ளை அடிக்கிரதுக்காகத் தான் இத செயல்படுத்தறார்னு வச்சிக்கிட்டாலும் அதுக்கு கருணாநிதி இவ்ளோ கஷ்டப்பட தேவை இல்ல ..கஷ்டப்படாம சத்தம் இல்லாமலே கொள்ளை அடிக்கப் பல வழிகள் இருக்கு . அது அவருக்கும் தெரியும் . நீங்க சொல்றது படி , minority ஓட்டு கிடைக்கும்கிறதுக்காக hinduism'ஐ எதிர்க்கிறார்னு வச்சிக்கிட்டாலும் . வெறும் minority வச்சு எப்படி win பண்ணிட முடியும் ? minority கும் , majority கும் difference இல்லையா . இதுவே , MK hinduism'ஐ ஆதரிச்சு பேசின , majority'ஆன hindus ஓட்டு கிடைக்கத் தான் இப்படி பேசறார்னு சொல்லுவீங்க !



மச்சான்… Already Tsunami தாக்குனப்போ, இந்த news’உம் சேர்ந்து தான் வந்துச்சு. அதை இன்னும் யாரும் உறுதி பட இது தான் காரணம்னு சொல்லலை. But, அதுவும் ஒரு காரணம்னு சொன்னாங்க. நீ படிக்கலைன்னா நான் பொறுப்பு இல்லை. Tsunami’யின் தாக்கம் குறைவா இருந்ததுக்கு reason’னு தான் சொன்னாங்க. (Srilanka’வும் சேர்த்து நம்மை அதுல இருந்து பாதுகாத்துசுன்னு சொன்னாங்க) நான் சொன்னது comparitively தான். Indonasia’வுல ஏற்பட்ட கோடிக்கணக்கான பொருள் நஷ்டமும், lacs கணக்குல ஆளுங்க செத்துப் போனதுக்கும், நம்ம நாட்டுல ஆயிர கணக்குல செத்தது, கம்மி தான? எதோ ஒரு விதத்துல நல்லது நடந்தா அதுவும் நல்லது தான? And, உங்க வீட்டுல தண்ணி ஒழுகுதுன்னு சொன்னா தான், அதை சரி படுத்த try பண்ணுவையே ஒழிய, எப்பவுமே cement’உம் கையுமா அலைஞ்சுட்டு இருக்க மாட்ட. அதே மாதிரி தான், பிரச்சினைன்னு வந்தாத் தான், அதை பற்றிய வாதங்களும் அதிகரிக்கும். இன்னொன்னு தெளிவா சொல்லிக்கிறேன். என்னைய எதோ BJP’க்கோ, RSS’க்கோ support பண்றேன்னு சொல்லாத. Babri masjid இடிச்சதை நான் என்னைக்குமே support பண்ணது கிடையாது! (அப்போ எனக்கு வயசு 10 இருக்கும். So, அப்போ ஏன் அதைப் பத்தி பேசலைன்னு கேக்குறது தான் சின்னப் புள்ளத் தனமா இருக்கு!)
Hmm.. யாருக்குப்பா தெரியும், MK எவ்வளவு கொள்ளை அடிக்கப் போறாருன்றது? Anyway, அதை நான் ஒரு சந்தேகமாத் தான் எழுப்பி இருந்தேன். And, reg minority issue. என்ன தான் நாம secularism மண்ணாங்கட்டின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாலும், minority ppl’க்கு எப்பவுமே ஒரு insecure feeling இருக்கத் தான் செய்யுது! அதுக்குத் தான் எல்லா கட்சியும் அவங்க செல்வாக்கை வாங்குறதுக்கு try பண்ணிட்டு இருக்கு. (BJP tried the otherwise and it got failed. என்ன, majority hidus’க்கு எந்த insecure feeling’உம் கிடையாது! So, அவங்க vote வேற வேற கட்சிகளுக்கு சிதறிடுது!!) ie: Majority vote எப்படியும் சிதறத் தான் செய்யும், என்ன தான் செஞ்சாலும். So, atleast, minority vote’ஐயாவது சிதறாம வாங்கனும்கிறது தான் DMK உட்பட எல்லா கட்சிகளோட கொள்கையும் கூட. BJP’உம் கொஞ்ச நாளைக்கு அதை try பண்ணி பாத்தது. But, அது பொழைச்சுட்டு இருக்கிற VHP support போய்டுமோங்கிற பயத்துல கொஞ்சம் குறைச்சுகிச்சு!! இது ஊருக்கே தெரிஞ்ச ரகசியம். இதை பத்தி தெரியாத மாதிரி நீ கேக்குறது தான் comedy’ஏ!!


*********** மச்சான் ..tsunami தாக்கின appo நான் paper படிச்சா மாதிரி தான் இப்பவும் படிக்கிறேன்..ஆனா tsunami'ஐ தடுக்க ராமர் பாலம் தான் காரணம்னு இப்போ ரொம்ப அதிகமா செய்தி படிக்கிறேன்.இப்போ வந்த அளவுக்கு அப்போ வந்திருந்தா நிச்சயம் என் கண்ணில் பட்டிருக்கும்.அப்போ நிச்சயமா இவ்ளோ வரல(நான் ஒரு தடவை கூட படிக்கல) . உயிர் என்பது விலை மதிக்க முடியாதது . அதை எண்ணிக்கையை வச்சு compare பண்ண முடியாது. ஆனா இப்போ indonasia'உம் india'உம் compare பண்ணி பேசறோம் ..கஷ்டமாத்தான் இருக்கு . ஆனா tsunami சோகத்துல கூட , tsunami'இன் வீரியத்தை குறைத்தது ராமர் பாலம் தான் சொன்னவரோட presence of மத உணர்வை , பாராட்டியே தீர வேண்டும்.
moreover tsunami'இன் வீரியத்தை குறைச்துன்னு யாரு சொல்றாங்கன்னு தெரியல.அது நிஜமா இருந்தாலும் ..அப்படி சொல்றவங்க யாரு அது எந்த motive காக சொல்லப்படுறதுன்னு தான் பாக்கணும்.
இனிமேல் tsunami வந்தா அதைத் தடுக்க வழிவகுக்கும்கிறதால தான் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாதுன்னு சொல்றோம்" . இந்த statement'ஏ சேது சமுத்திரம் எதிர்பவர்களோட first statemnt ஆ இருந்தா அவங்களோட உண்மையான அக்கறை தெரிஞ்சுக்கலாம்.but சேது சமுத்திரமை எதிர்ப்பவர்கள் எல்லாம் முதலில் சொன்னது ராமர் பாலம் என்கின்ற விஷயத்தைத் தான்.அப்புறம் தானே thorium , monument , எல்லாம் சொல்லப்பட்ட சப்பைக் காரணங்கள். cement'ஐ விடு மச்சான் ..வீடு ஒழுகிரதுக்கு காரணம் ஓடு ஒடைஞ்சிருச்சு , ஓட்டை மாத்திடலாம்னு சொல்றேன் .. ஆனா வீடு ஒழுகிரதுக்குக் காரணம் மழை வர்றதினால தான்னு நீ சொல்றதுதான் comedy ஆ இருக்கு , but of course நீ சொல்றது உண்மை தானே . babar masjid சம்பவம் நடந்த அப்போ உனக்கும் 10 வயசு தான் எனக்கும் 10 வயசு தான் மச்சான் .அது எப்படி அது பற்றி தெரியாத மாதிரியே பூசி மெழுகற? ***********


நீ படிக்கலைங்கிற ஒரே காரணத்துக்காக அந்த மாதிரி news வரலைன்னு சொல்ல முடியாதுல்ல? (I am very sorry. இப்போ 2 yrs கழிச்சு, உனக்கு அந்த papers’ஐ எடுத்து என்னால proof காமிக்க முடியாது. Moreover, Tsunami’ஐ காரணமா சொல்றது எனக்கு தெரிஞ்சு நான் தான். வேற எதுவும் paper’ல அதைப்பத்தி பெருசா வரலை!!) நீயே சொன்ன மாதிரி அவங்க பெருசு படுத்துறது ராமர்ங்கிற issue தான். அந்த issue’ஐ அவங்க அரசியலுக்காக எடுத்திருக்கலாம்(லாம் என்ன… அது தான் reason!) But, நான் ஒண்ணும் BJP சொல்றதுக்கு ஆதரவா பேசலையே… Paper’லயும், magazines’லயும் மக்களும், media’வும் சொல்றதைத் தான சொல்றேன். எனக்கு ஒன்னு புரியலை. நீ என்னைய BJP’ஐ support பண்றவனா காண்பிக்க ஏன் try பண்ற? நான் அந்த மாதிரி எங்கயுமே சொல்லலையே. அப்படி சொன்னாத் தான் என்னோட questoins’ஐ tackle பண்ண முடியும்னா?
And, again I am saying tat… நான் ஒண்ணும் VHP babar masjid இடிச்சதை சரின்னு சொல்லலை. உனக்கு மட்டும் எங்க இருந்து அது கண்ணுல பட்டு நான் பூசி மெழுகிறதைப் பாத்தேன்னு தான் தெரியலை!



No comments:

Post a Comment