http://www.dinamani.com/ -> ஆவணங்கள் -> 12th Nov 2007 -> தமிழகம் -> விடுதலைப்புலிகள் மீண்டும் டீசல் பறிப்பு.
விடுதலைப்புலிகள் மீண்டும் diesel பறித்துச் சென்றிருக்கிறார்கள், ராமேஸ்வரம் மீனவர்களிடமிருந்து. ராணுவ உடையில் வந்து பறித்தது மட்டுமல்லாமல், கண்ணாடி bottle'ஐயும் வீசிவிட்டு, இனிவரும் காலங்களில் oil & petrol கொடுத்து விட்டுத் தான் மீன் பிடிக்க வேண்டும் என்றும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
LTTE'ஐப் பொறுத்த வரை ஈழத்துத் தமிழர்கள் மட்டும் தான் வாழ வேண்டுமா? மற்றவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் இவர்களின் செயல்களுக்கு LTTE ஆதரவாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுக்கு என்ன... எப்பொழுதும் இலங்கை அரசு தவறு செய்தால் மட்டும் தான் கண்டிக்கத் தெரியும்! இந்த செயல்களுக்கு வாய் மூடி மௌனமாகத் தானே இருக்கப் போகிறார்கள்!! இல்லையென்றால் LTTE'க்கு வேறு வழி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை அரசின் சில செயல்களையும் இதே போல் நியாயப் படுத்திவிட முடியும்.
நமது இந்திய மக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்துடன் போராடும் LTTE'க்கு ஆதரவாக இங்கு பொதுக்கூட்டம் போடுவதும், கவிதை எழுதுவதும் வெட்கக் கேடு!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆதி,
ReplyDeleteஅடி வாங்கினால் தான் அவர்களால் தமிழர்கள் பட்ட வலி தெரியும். ஊமக்கு இது விளங்காது.
கார்த்திக்.
@கார்த்திக்... நான் ஒன்றும் சிங்கள இராணுவம் செய்யும் எல்லா செயல்களையும் நியாயப்படுத்த வில்லை. ஆனால் அதற்காக, தமிழர்களின் saviours'ஆக LTTE'ஐப் பார்ப்பதைத் தான் எதிர்க்கிறேன். நான் முன்பே சொல்லியதுபோல், LTTE ஆரம்பித்த காரணம் வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். ஆனால், தற்போது அவர்கள் போகும் பாதை சரியல்ல. LTTE'யினால் அப்பாவி சிங்கள உயிர்கள் பலியாவதை எக்காரணம் கொண்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள ராணுவத்தால் ஏற்படும் உயிரிழப்பை மட்டும் கண்டிக்க வேண்டும், LTTE பண்ணினால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?
ReplyDelete