எனக்கு forward வந்தது... செல்லாவின் latest blog... முதலில் அந்த link... http://osaichella.blogspot.com/2007/11/blog-post_05.html
கீழே உள்ளவை என் மறுமொழிகள் ...
எனக்கு இப்பவும் ஒண்ணு மட்டும் புரியவே மாட்டங்குது … அந்த நிகழ்ச்சியில அந்த பொண்ணு பேசிய விதம், நிச்சயமா கண்டிக்கப் பட வேண்டியது. பொளேர்னு அறையணும் போல தான் தோணிச்சு!! எத்தனையோ நிகழ்ச்சிகளில், ஏதாவது யாராவது mention பண்ணினால், அந்த வார்த்தையை மட்டும் cut செய்யும் Vijay TV(இதற்கு முன் எத்தனையோ முறை நீயா நானாவில் கூட இது நடந்திருக்கிறது!), இதையும் cut பண்ணி இருக்கலாம் சரி… அதை விடுங்கள்..
But, எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேரு சாதி மாறி கல்யாணம் பண்றதை ஆதரிக்கலை. அந்த programme’லேயே ஒரு அம்மா, தன்னோட பையனை ஜாதி மாத்தி திருமணம் செய்ய மாட்டேன். ஏன்னா, என்னோட ஜாதி எனக்கு உயர்ந்ததுனு எல்லாம் பேசினாங்க. ஒரே வித்தியாசம், தன்னோட ஜாதி எண்ணங்கிறதை அவங்க சொல்லலை. இந்த ஒரு காரணத்தை வச்சே, again Brahmins மேல தாக்குதல் டுக்குறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு புரியலை. மத்தவங்க பேசுறதையே Brahmins’ம் பேசுனா, ஏன் அவங்களை மட்டும் கண்டுக்கிறாங்க? ஏன், தங்களுக்கு சாதகமா, மத்த ஜாதிகளை சேர்ந்தவங்க பேசுறதை ஓரம் கட்டுறாங்க?? அதுவும் இந்த மாதிரி ஒரு பொண்ணு பேசுனதை மட்டும் வச்சி, total'ஆ மறுபடியும் Brahmins மட்டும் தான் இப்படின்னு பேசுறதுல என்ன நியாயம் இருக்கு?
அது போகட்டும்… எங்க வீட்டுல இந்த programme அப்போ என் நண்பன் ஒருவனால் கேட்கப் பட்ட ஒரு கேள்வி... “நான் தமிழனா பிறந்ததற்கு, பெருமை படுகிறேன்னு ஒருத்தன் சொன்னா தப்பு இல்லை. நான் ____ ஜாதியை சேர்ந்தவனா இருக்கப் பெருமைப் படுகிறேன்னு சொல்றது மட்டும் தப்புன்னு சொல்றது எந்த வகையில் நியாயம்?"
ஞானி சொன்ன மாதிரி, “நான் இந்தியன்னு சொல்லிக்கிறதே கூட, ஒரு வகையில் கொஞ்சம் முன்னேறிய ரீதியில் ஜாதி பற்றி பேசுவது தான்.
மனுஷங்களை மனுஷங்களா பாக்காத வரைக்கும், அந்த பொண்ணு, அந்த lady மாதிரி சுய தம்பட்டம் அடிக்கிறவங்களும் இருப்பாங்க. இந்த Chella மாதிரி, அதை(மட்டும்) கண்முடித் தனமா குறை சொல்றவங்களும், அதை ஏதோ Brahmins மட்டும் தான் செய்யிற மாதிரி ஒரு மாயை create பண்ணி forward செய்யிறவங்களும் இருக்கத் தான் போறாங்க. :-)
Subscribe to:
Post Comments (Atom)
ha ha.. photo competition paakka vanthaa.. inga neenga enakku aappu vachirukkeenga! great! you have writen some valid points!
ReplyDeleteha ha... நன்றி செல்லா... நல்லவேளை... உங்களுக்குக் கொடுத்த comments'ஐ light'ஆக எடுத்துக் கொண்டதற்கு! Actually, பயந்துட்டு இருந்தேன்... ஏதாவது திட்டி வைக்கப் போறீங்களோன்னு... (எங்க company'ல forward செஞ்சப்ப, ஒன்னு ரெண்டு பேருகிட்ட இருந்து திட்டு வந்ததும் ஒரு காரணம்!!) :-)
ReplyDelete