ஒரு வழியாக வழக்கமாக(குறைந்தது வாரம் ஒருமுறை) ப்லாக்கலாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ம்... விதி வலியது. அவ்வாறு எழுத ஆங்கிலத்தை விட தமிழ் எளிதாக இருக்கும் என்று நினைத்ததால் தான் இப்படி. அதாவது எனக்கு எழுத கடினமாக இருந்தாலும், படிக்க மற்றவர்களுக்கு சுலபமாக இருக்கும். எனது ஆங்கில புலமை அப்படிப் பட்டதாக்கும். :-)
ம்... ஆங்கிலம் உபயோகித்து உபயோகித்து சில வார்த்தைகளின் தமிழின் சமமான வார்த்தைகள் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஆகையால் சில பல ஆங்கில பிரயோகங்கள் இருந்தால் மன்னித்தருளவும். இதை எழுதும் பொழுது எனகே கொஞ்சம் சந்தேகமாக உள்ளது... தமிழ் அழிந்து கொண்டுள்ளதா?? இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. கால மாற்றத்திற்கேற்ப தாக்கு பிடிக்கும் மொழி தான் தமிழ். இல்லையென்றால், 2000 வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருதம் வந்த பொழுதே அழிந்து இருக்க வேண்டும். அல்லது, 400 வருடங்கள் முன்பு ஆங்கிலம் வந்த பொழுதே அழிந்து இருக்க வேண்டும். பிற மொழிகளையும் தன்னுள் வாங்கி தன்னை வளப்படுத்திக் கொள்ளும் மொழி அழிவதற்க்கு வாய்ப்பு இல்லை. ஆங்கிலம் வளர்ந்ததே அப்படி தானே! எனவே ஆங்கில கலப்பு பற்றி அச்சம் கொள்ள தேவை இல்லை.
ஆனால் மொழி வல்லுனர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அறிவியல் பெயர்களை கூட தமிழ் படுத்துவதை தவிர்க்கலாம். கல்லூரியில் "தனிமம்" என்பதன் ஆங்கில வார்த்தை தெரியாமல் நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். (இன்னமும் அது தெரியாது என்பது வேறு விஷயம்!)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment