Thursday, June 12, 2008

Jun 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

மக்களே... கொஞ்சம் அவசரமா ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கிறதால வந்து blog'ஐயும் update பண்ணி, flickr'ல foto'வும் போடுறேன். அது வரைக்கும் இந்த picasaweb link'ல பாத்துக்கோங்க.

முதல் படம் போட்டிக்கு... இரண்டாவது படம் பார்வைக்கு...
http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210843971170595154

http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210844368899959682

Thursday, May 15, 2008

May 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

இந்த முறை Foto எடுக்கப் போனதே கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். முதலில் இந்த மாத தலைப்பை மனதில் வைத்தே foto எடுக்கவில்லை... ஹி ஹி... 10 நாள் முன்பு தான் புது DSLR(Canon 40D) கைக்கு வந்ததால் அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருந்தது. (இன்னும் அந்த ஆராய்ச்சி முடியலைங்கிறது வேற விஷயம்) தற்செயலாக எடுத்த ஒரு foto இந்த மாத தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. :-)

போன வாரம் ஒரு அருமையான புது விஷயங்கள் நிறைய கற்றுக்கொண்ட ஒரு வித்தியாசமான trip. காஞ்சிபுரம் & வேலூர். நாதனும் பிரபாகரும் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனது ஒரு வகையில் இழப்பு தான் என்றாலும், Peevee'ம் Ravages'ம் அந்த இழப்பை ஈடுகட்டி விட்டார்கள். Street fotografy'ஐ ஒரு புது விதமான கோணத்தில் அணுக Peevee'யுடனான சந்திப்பு மிகவும் உதவியது. இதுவரை, நான் foto எடுத்த மக்களுடன் பேசிய அனுபவமே கிடையாது. ஆனால், street fotografy'க்கு interaction மிக முக்கியமான ஒன்று என்பதே இந்த trip'ல் தான் புரிந்தது. (அப்பாடா.. Jury'குக் கொஞ்சம் ice வச்சாச்சு) :-)
Ravages'ம் fotografy பற்றி நிறைய tips எல்லாம் கொடுத்தார்.

Selva'வும் நாதனும் எனது ஊருக்கு வந்தது, fotografy, advertisement மேல் எனக்கு இருந்த ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தது என்றால், இந்த காஞ்சி trip அதையே இன்னும் கொஞ்சம் friendly'ஆன manner'ல் அணுக ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. Thanx to everyone who are guiding us. :-)

இனி, இந்த மாத போட்டிக்கு... (முதல் படம் போட்டிக்கு)

0192-IMG_0941(@Jalagandeshwarar Temple, Vellore)



இது சும்மா எடுத்தது.
0193-IMG_0951(@Jalagandeshwarar Temple, Vellore)

Tuesday, April 15, 2008

April 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/04/pit-2008.html

வர வர நம்ம PIT'ல conceptual'ஆன தலைப்புகள் வர ஆரம்பித்து விட்டது. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். :-)

தனிமை... இந்த topic'ல நாம தான் நிறைய fotos எடுத்திருப்போமேன்னு யோசிச்சிட்டு சரி... இந்த தடவை வேற ஏதாவது வித்தியாசமா try பண்ணலாம்னு யோசிச்சி(?) எடுத்தது தான் கீழ இருக்குற ரெண்டு படங்களும்.

முதல் படம் போட்டிக்கு... உஷ்.... அப்பப்பா... இந்த foto'வுக்கு மக்களை pose குடுக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடிச்சி. உங்க face'லாம் எடுக்க மாட்டேங்க... திரும்பி உக்காந்தா போதும்னு ஒவ்வொரு lovers கிட்டயா கேட்டு செருப்படி வாங்காத குறையா திரும்பிப் போகலாம்னு யோசிச்சிட்டு(அட... யோசிக்கிரதை விட மாட்டானாப்பா இவன்?) இருந்தப்போ தான் பளிச்சின்னு ஒரு idea... lovers தான ஒத்துக்க மாட்டாங்க... நாம ஏன் married couple கிட்ட கேக்க கூடாதுன்னு ஞானோதயம் வந்திச்சு. கும்பிட போன தெய்வம் மாதிரி இந்த couple வந்தாங்க... அப்புறம் அந்த uncle-aunty(தாத்தா பாட்டின்னு கூப்பிடக் கூடாதாம்) :-) எல்லாரும் ரொம்ப பொறுமையா உக்காந்து pose குடுத்தாங்க. அவர்களுக்கு எனது நன்றிகள்.

இரண்டாவது படம்... அந்த glass and its reflection'ஐ மட்டும் concentrate பண்ணி ஒரு தண்ணி அடிக்கிற மனுஷனோட தனிமையை எடுக்கனும்னு நினைச்சேன்... அந்த அளவுக்கு வரலை.

முதல் படத்தை click பண்ணி கொஞ்சம் பெருசா பாருங்களேன்.

0162-Loneliness


0161-DSC05594

Saturday, March 15, 2008

Mar 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.html

கடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...

இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு வந்துட்டேன்... :-)

இரண்டும், மூன்றும் போட்டிக்கு...

இந்த foto Reflections'ங்கிற தலைப்புக்கு literal'ஆ பொருந்தலைன்னாலும் conceptual'ஆ பொருந்துதுங்கிறதால இதையும் பார்வைக்கு வச்சிருக்கேன்.













வழக்கம் போல கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமா ஒரு Ad'ம் பண்ணிட்டேன். இது மட்டும் சென்னையில் எடுத்தது. Flash போட முடியாதுங்கிரதால ISO'ஐ கொஞ்சம் அதிகப்படுத்தினதால noice கொஞ்சம் அதிகம் இருக்கு. :-(


















மத்தது எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில்ல எடுத்தது.


















கீழ இருக்குற மற்ற இரண்டும் பார்வைக்கு...


Thursday, February 28, 2008

சுஜாதாவிற்கு அஞ்சலி...

நாம் ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரை இழந்து விட்டோம்... ஒரு நாவலாசிரியரை இழந்து விட்டோம்... ஒரு நல்ல விமர்சகரை இழந்து விட்டோம்... ஒரு atricle writer'ஐ இழந்து விட்டோம்... ஒரு cinema வசனகர்த்தாவை இழந்து விட்டோம்... ஒரு cinema script writer'ஐ இழந்து விட்டோம்... அறிவியலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ஒரு மாமேதையை இழந்து விட்டோம்...


இந்த list எப்பொழுது முடியும்? இவர் கால் பதிக்காத துறை தான் எது? சரியாக சொல்லப்போனால் ஒரு genius'ஐ இழந்து விட்டோம். உண்மையில் சுஜாதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்!!

Friday, February 15, 2008

February 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/01/2008-pit_31.html

இதோ நானும் வந்துட்டேன். Memory Stick corrupt ஆகிட்டதால அதுக்கு replacement'ஏ 3 நாள் முன்னாடி தான் வந்தது... அதுனால தான் late ஆகிப்போச்சுன்னு சொன்னா யாரும் நம்பவா போறீங்க.. :-) வழக்கம் போல, சோம்பேறித்தனத்தால late ஆகிப்போச்சு. ஹி ஹி...

இந்த முறையும் topic நல்ல generalized ஆக இருந்ததால கொஞ்சம் conceptual'ஆகவும் try பண்ணிருக்கேன். முதல் foto'வைத் தவிர மத்த ரெண்டு foto'வையும் comments'ஓட பாருங்க. Photo'வை click பண்ணிப் பாருங்க... என்னோட blog backround color நல்லா இருக்காது.

முதல் இரண்டும் போட்டிக்கு...





இதை bike Ad'ஆ consider பண்ணிக்கலாமா? :-)
















"This may turn into Red also. Be Aware." -- Anti AIDS campaign

















Like One another Valentine's Day for me ;-)

Tuesday, January 15, 2008

ஜனவரி 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/12/2008-pit.html

இந்த முறை தலைப்பு நிறைய creative ideas'க்கு வழிவகுப்பது போல் இருந்தது. தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.


சரி... இந்த முறை தலைப்பை வைத்து, நம்ம PIT'க்கு ஒரு AD மாதிரி பண்ணலாமேன்னு முடிவு பண்ணி எடுத்தது தான் முதல் படம் தவிர மற்ற படங்கள். :-)


Even, இந்த முதல் படத்தைக் கூட வளையலுக்கு AD'ஆக consider பண்ணிக் கொள்ளலாம். :-)

















அடுத்தது என்னால் முடிந்த அளவுக்கு simple'ஆக எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறேன்.

Tagline can be like this: Now... its in tamil... Visit http://photography-in-tamil.blogspot.com/















அடுத்தது... சொல்லப்போனால், எதாவது school தமிழ் book'ஐ வாங்கி அதை வைத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் எண்ணம் உள்ளது. சரி... concept வந்திடுச்சின்னு விட்டுட்டேன். ஹி.. ஹி...

















அடுத்தது... indoor'ல் எடுத்தது..

















முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு.